புத்திரசுவிகாரம் - பாகம் - 2 Jeffersonville, Indiana, USA 60-0518 1நாங்கள் ஒரு சபையாக, வெளியே அழைக்கப்பட்ட ஒரு கூட்டமாக, விசுவாசிக்கும் மக்களாக, இன்றிரவு எங்கள் தலைகளை வணங்கினவர்களாய், உமது வசனத்தைப் போதித்து எங்களுக்குரியவையான அந்த சரீரத்தில் எங்கள் ஸ்தானங்களில் எங்களைப் பொருத்திக் கொண்டு கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாக நாங்கள் இசைவாய் இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் உடனே தேவனுடைய சமூகத்தில் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு கட்டளை அளிக்கப்பட்டுள்ளது. தகப்பன்மார்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும், அது எங்கள் மகளாயிருக்குமானால், எங்கள் மனம் வேதனைப்பட்டு, அவளுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டுமென்று நாங்கள் உடனே சபைக்கு வேண்டுகொள் விடுப்போம். இன்று இங்குள்ள ஒரு தகப்பனின் இருதயம் அவ்வாறு வேதனையடைந்துள்ளது ஆண்டவரே, அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே அந்த தகப்பனின் இருதயத்துக்குள் வந்து, எல்லா சந்தேகங்களையும், வேதனைகளையும் அகற்றுவாராக. நீரே தேவன் என்றும், உம்முடைய திவ்விய கட்டளையை சபையும் அதன் மக்களும் நிறைவேற்றும்போது, எந்த வியாதியும் உமது சமூகத்துக்கு முன்பாக நிற்க முடியாது என்றும் அவர் அறிந்து கொள்வாராக. 2சென்ற ஞாயிறு தொடங்கி இந்த வாரம் முழுவதும் நான் ஜெபித்து வந்த போது, இந்த வழிமுறையை நான் ஆலோசித்து வந்தேன். உலகத்தின் கண்களினால் நோக்குவோமானால், எங்களிடம் எவ்வித பலத்த ஆயுதமும் கிடையாது. ஆனால் 'விசுவாசம்' என்னும் விரல்களில் இந்த கவண், மிகுந்த சக்தி வாய்ந்ததாகிவிடுகிறது. ஓ, ஆண்டவரே, எங்கள் ஜெபங்கள், அந்த குழந்தையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த இருளை தாக்கி அதை சிதறடிக்கச் செய்வதாக. அந்த பெண் குழந்தையின் படுக்கையின் மேலுள்ள அந்த இருள் அகன்று செல்வதாக. தேவனுடைய பிரசன்னத்தின் மகத்தான ஒளி அதன்மேல் பிரகாசிப்பதாக அந்த குழந்தை சுகமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறட்டும். தேவனே, நதிக்கப்பால் எங்களுக்கு அருமையானவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அறிவோம். அது மிகவும் மகிமையுள்ளது. ஆனால் எங்கள் சிறு குழந்தைகளை நாங்கள் நேசிக்கிறோம். ஆண்டவரே, உமது மகிமைக்கென்று அந்த குழந்தையின் ஜீவனை விட்டுக் கொடுக்குமாறு வேண்டுகிறோம். நாங்கள் சபையாக மரணத்தைக் கடிந்து கொண்டு, அங்கேயே நில், “அந்த குழந்தையை நீ எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் அந்த குழந்தையின் ஜீவனை நாங்கள் உரிமை கோருகிறாம்'' என்கிறோம். ஆண்டவரே, நாங்கள் அனுப்பும் திசையில் இவை செல்ல அருள் புரியும். இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 3நாம் விசுவாசிக்கிறோமா? நான் கிறிஸ்தவன் அல்லாமலிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. அப்படியானால், நான் வாழ விரும்பியிருக்கமாட்டேன். எனக்குத் தெரிந்த மட்டில் மற்றவர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வருவதற்கு மதத்திரமேயன்றி, வேறெதற்கும் வாழ வேண்டிய அவசியமேயில்லை. இன்றிரவு, முந்தின பாடத்தின் சாராம்சத்தை கூற விரும்புகிறேன். கூடுமானால், அந்த முழு அதிகாரத்தையும் இன்று வாசிக்க முயல்வேன். எனவே ஞாயிறு காலையன்று... ஞாயிறு காலை. இரவு ஆராதனைகளில்... சபை எதை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேனோ, அதன் அமைப்பைக் குறித்து போதிக்கலாமென்று எண்ணுகிறேன். ஓ, உங்கள் ஸ்தானத்தை நீங்கள் அறிந்து கொள்வதென்பது மிகவும் மகிமையுள்ள செயலாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சரிவர அறியாமல் போனால், யாருமே எதையும் செய்ய முடியாது. 4உங்களுக்கு அறுவை சிகிச்கை செய்யப்பட வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். ஒரு வாலிப மருத்துவர், அறுவை சிகிச்சை அனுபவமே இராமல், அப்பொழுது தான் மருத்துவக் கல்லூரியில் படித்து வெளிவந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆயினும் காண்பதற்கு அவர் அழகுள்ளவர்; தலையை நன்றாக வாரிக்கொண்டு, நன்றாக உடுத்தி, நல் நடத்தையுள்ளவராயிருக்கிறார். அவர் உங்களிடம், “அறுவை சிகிச்சைக்கென கத்தியை கூர்மையாக்கிவிட்டேன், கிருமி நாசனமும் செய்துவிட்டேன்” என்று கூறுவாரானால், அவரைக் குறித்து உங்களுக்கு ஒரு வினோத உணர்ச்சி உண்டாகக் கூடும். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய, அப்பொழுது தான் மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளிவந்த மருத்துவரைக் காட்டிலும், போதிய அனுபவமுள்ள மருத்துவர் ஒருவரையே நான் தேர்ந்தெடுப்பேன். எனக்குத் தெரிந்தவரையில், சிறந்த அனுபவம் வாய்ந்தவர் பரிசுத்த ஆவியானவரே. அவரை நாம் இன்றிரவு அழைப்போம். அவரே மகத்தான வைத்தியரும். மகத்தான போதகருமாயிருக்கிறார். 5என் இன்றிரவு செய்திக்கு முன்னுரையாக ஞாயிறன்று அளித்த செய்தியின் தொடர்ச்சியாக... அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்த சாமுவேலைப் புறக்கணித்து. கீசின் குமாரனாகிய சவுலைத் தெரிந்து கொண்டனர். பரிசுத்த ஆவிக்கு சாமுவேல் அடையாளமாயிருந்தான். ஏனெனில் அவன் ஆவியானவர் ஏவினதையே பேசினான். அவனை அவர்கள் புறக்கணித்தனர். சாமுவேல் இதை அவர்கள் கவனத்துக்கு கொண்டு வந்து, “நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தது ஒன்றையும் கர்த்தர் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. உங்களுக்கு முன்பாக நான் தவறாக நடந்ததுமில்லை. நான் பாவம் செய்தேன் என்று யாரும் என்னைக் குற்றப்படுத்த முடியாது'' என்றான். “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும்?'' என்று இயேசு கேட்டது போல். பாருங்கள்? சாமுவேல் மேலும், ''நான் உங்களிடம் பணம் கேட்டதில்லை உங்களிடமிருந்து நான் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் கூறின அனைத்தும் உங்கள் நன்மைக்காகவே கூறினேன். அவை தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாம்“ என்றான். ஜனங்கள் எல்லோரும், ''அது உண்மை என்று சாட்சியாக அறிவித்துவிட்டு, ஆயினும் எங்களுக்கு ஒரு ராஜா அவசியம். நாங்கள் உலகிலுள்ள மற்றவர்களைப் போல் இருக்க விரும்புகிறோம்'' என்றனர். 6எபேசியர் நிருபம் தான் புதிய ஏற்பாட்டின் யோசுவாவின் புத்தகம். அது பகிர்ந்து கொடுத்து, ''ஜெயங்கொண்டவர்களை ஒழுங்குக்குள் கொண்டு வருகிறது. நாம் மூன்றாம் வசனத்தை படிக்கும் முன்பாக. ஒரு சில நிமிடங்கள் இதை முன்னுரையாக கூற விரும்புகிறேன். சென்ற ஞாயிறன்று நாம் பார்த்தோம்... பழைய ஏற்பாட்டில் தேவன். இஸ்ரவேல் ஜனங்கள் இளைப்பாற ஒரு தேசத்தை அவர்களுக்கு கொடுப்பதாக வாக்களித்திருந்தார். ஏனெனில் அவர்கள் சொந்தமில்லாத தேசத்தில் அவர்கள் குடியிருந்தனர். அவர் ஆபிரகாமிடம். அவன் சந்ததியார் நானூறு ஆண்டு காலம் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள் என்றும். அங்கே அவர்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும், ஆனால் அவர் அவர்களை பலத்த கரத்தினால் மீட்டு, பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு கொண்டு செல்வார் என்றும் வாக்களித்திருந்தார். 7அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் நெருங்கின போது. அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்ல ஒருவனை எழுப்பினார். அது யாரென்று வகுப்பிலுள்ள எத்தனை பேருக்குத் தெரியும்? மோசே கவனியுங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு நம்மை கொண்டு செல்வதற்கென அளிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு அவன் பூரண முன்னடையாளமாகத் திகழ்ந்தான். நமக்கு ஒரு வாக்குத்தத்தம் உண்டு அது ஆவிக்குரிய இளைப்பாறுதல் அவர்களுக்கோ சரீரப்பிரகாரமான இளைப்பாறுதல் வாக்களிக்கப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தேசத்தை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அந்த தேசத்தை அவர்கள் அடைந்தவுடன், ''இது எங்களுடைய தேசம். நாங்கள் இனி சஞ்சாரிகளல்ல. நாங்கள் ஒரிடத்தில் தங்கிவிட்டோம். எங்கள் திராட்சை தோட்டத்தை நாட்டுவோம். எங்கள் திராட்சை தோட்டத்தின் பலனைப் புசிப்போம். நாங்கள் கடந்து செல்லும்போது, இதை எங்கள் பிள்ளைகளுக்கு விட்டுசெல்வோம்'' என்று அவர்களால் கூற முடிந்தது. 8ஓ, நாம் எவ்வாறு அந்த தேசத்தைக் குறித்து ஆராய்ந்து சுதந்தரித்தலின் சட்டதிட்டங்களையெல்லாம் குறித்து தியானிக்கலாம் - நகோமி, ரூத், போவாஸ் போன்றவர்களைக் குறித்துப் பார்க்கலாம்!எவ்வாறு இஸ்ரவேலில் ஒரு சகோதரன் இழந்து போன யாதொன்றும் அவன் உறவின் முறையானால் மீட்கப்பட வேண்டும்! ஓ! எவ்வளவு அழகாயுள்ளது. அதை நாம் தியானிக்கத் தொடங்கினால், அநேக வாரங்கள் பிடிக்கும். நாமும் இந்த அதிகாரத்தை விட்டு வேறொன்றுக்கு செல்லமுடியாது. வேதாகமம் முழுவதையும் நாம் இந்த ஒரு அதிகாரத்துடன் இணைக்க முடியும். ஓ, அதை ஆராய்ந்து படிக்க எனக்கு மிகுந்த ஆவல். நாங்கள் அதை ஒன்றரை ஆண்டுகளாக படித்து வேதாகமத்திலுள்ள ஒரு புத்தகத்தையும் விட்டுவிடாமல் அதிலே நிலைத்ததுண்டு. 9சுதந்திரம் (inheritance) என்பது மிகுந்த பெரிய காரியம். அந்த தேசத்தின், சுதந்திரத்தை நெருங்கின உறவின் முறையானவன் தவிர வேறுயாரும் மீட்க முடியாது. தாய்மார்களே அன்றொரு இரவு 'அடையாளம்' (token) என்பதைக் குறித்து நான் பேசினதை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேர், இழந்த நிலையிலுள்ள உங்கள் அருமையான பிள்ளைகளுக்காக ஜெபம் செய்தீர்கள் மறுபடியுமாக, 'உங்கள் சுதந்தரம்' பாருங்கள்? பவுல் அந்த ரோம சேவகனிடம், ''கர்த்தராகி இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்“ என்றான் (அப் 16:31). நீங்கள் இரட்சிக்கப்பட உங்களுக்கு போதிய விசுவாசம் இருக்குமானால், உங்கள் மகனோ மகளோ எவ்வளவாக வழிதவறி சென்றிருந்த போதிலும், அவர்கள் எப்படியாயினும் இரட்சிப்படைவார்கள் என்னும் போதிய விசுவாசத்தைப் பெற்றிருங்கள்; தேவன் எப்படியாயினும் அவர்களை இரட்சிப்பார். தேவன் அதை வாக்களித்துள்ளார்... அந்த சுதந்தரத்தை. அவர்களும் அவர்களுடைய சந்தானமும் அங்கிருப்பார்கள். என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்'' என்று ஏசாயா சொல்லுகிறான். (ஏசா 65: 23, 25). ஓ, என் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒன்றைக் குறித்து இன்றிரவு பேசலாமென்று நினைக்கிறேன். அதற்கு நாம் வருவோம். நாம் முன் சென்று நோக்குவோம். 10மகத்தான அற்புதங்களைச் செய்த மோசேயை கவனித்தீர்களா? அவன் இஸ்ரவேலரை வனாந்தரத்தில் வழிநடத்தி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் வரைக்கும் அவர்களைக் கொண்டு வந்தான். ஆனால் அவர்களுடைய சுதந்தரத்தை அவன் அவர்களுக்கு அளிக்கவில்லை; அந்த தேசம் வரைக்கும் அவர்களை அவன் வழி நடத்தினான். ஆனால் யோசுவா தான் அவர்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்தான். அது சரியா? அதே போன்று, கிறிஸ்துவும் சபையை, அவர்கள் சுதந்திரம் பெற வேண்டிய இடம் வரைக்கும் கொண்டு வந்தார். யோர்தானைக் கடக்க வேண்டியது மாத்திரமே உண்டாயிருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் தான் சபையை ஒழுங்குபடுத்தினார். இன்றைய யோசுவா சபையை அதன் ஒழுங்குபடுத்தினார். இன்றைய யோசுவா சபையை அதன் ஒழுங்குக்கு கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் வரங்களையும் அவரவர் ஸ்தானங்களையும் அளிக்கிறார். அந்த பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து இரட்சிப்புக்கு உள்ளான மனிதனின் மூலம் பேசும் தேவனுடைய சத்தமாக இருக்கிறார். உங்களுக்கு அதுவரைக்கும் புரிகின்றதா? நாம் இப்பொழுது எபேசியர் நிருபத்தில் கூறியுள்ளவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் இப்பொழுது சபையை, அது இருக்க வேண்டிய ஸ்தானத்தில் பொருத்திக் கொண்டிருக்கிறார். யோசுவா இஸ்ரவேலரை உலகப் பிரகாரமான தேசத்தில் வைத்தான். இப்பொழுதோ பரிசுத்த ஆவியானவர் சபையை அது சுதந்தரமாகப் பெற்றிருக்கும் அந்த ஆவிக்குரிய தேசத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார். 11பவுல் இந்த நிருபத்தை எபேசியருக்கு எழுதுகிறான். இந்த இரகசியம் அனைத்தும் பவுலுக்கு வேதாகமக் கல்லூரியிலோ அல்லது வேத பண்டிதர் மூலமாகவோ வெளிப்படவில்லையென்றும் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக தேவன் இதை அவனுக்கு வெளிப்படுத்தினார் என்றும் இன்னும் சிறிது நேரத்தில் நாம் காணலாம். உலகத் தோற்றத்துக்கு முன்பாக மறைக்கப்பட்டிருந்த தேவரகசியம் பரிசுத்த ஆவியானவரின் மூலம் அவனுக்கு வெளிப்பட்டது என்று அவனே கூறுகிறான். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் இருந்து கொண்டு, ஒவ்வொருவரையும் ஒழுங்குபடுத்தி, சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்தி கொண்டு வந்தார். 12முதலாவதாக பவுல் ஜனங்களுக்கு சொல்லத் தொடங்குவது என்னவெனில்... இது சபைக்கு மாத்திரமே என்பது ஞாபகமிருக்கட்டும். வெளியிலுள்ளவர்களுக்கல்ல, வெளிப்புறத்திலுள்ளவனுக்கு, இது புதிராகவே இருந்து அவன் அதை புரிந்து கொள்ளாமல் போய் விடுகிறான். ஆனால் சபைக்கோ இது கற்பாறையிலுள்ள தேனாகவும், சொல்லி முடியாத சந்தோஷமாகவும், ஆசிர்வாதமான நம்பிக்கையாகவும், ஆத்துமாவுக்கு நங்கூரமாகவும் உள்ளது. இது காலங்கள் தோறும் உள்ள கற்பாறையாகவும், நன்மையானவை அனைத்தும் ஒருங்கே சேர்ந்ததாகவும் உள்ளது. வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. 13ஆனால் கானானுக்கு வெளிப்புறத்திலுள்ள மனிதன் இதை குறித்து ஒன்றுமே அறியான். அவன் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறான். அவன் நல்லவன் அல்ல என்று நான் சொல்ல வரவில்லை. நான் அப்படி கூறவில்லை எகிப்திலிருந்தவர் கூட நல்லவர் அல்ல என்று நான் கூற முற்படமாட்டேன். ஆனால் அவன் பெறவிருக்கும் சுதந்தரத்துக்கு அவன் வரும் வரைக்கும்... சபைக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் உலகப்பிரகாரமான ஒரு தேசமல்ல, ஆவிக்குரிய தேசம். ஏனெனில் நாம் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாகவும், பரிசுத்த ஜாதியாயும் (1பேது: 2:9), வினோதமான ஜனங்களாகவும், வெளியே அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டு ஒரு பிரத்தியேகமான காரியத்திற்காக ஒதுக்கப்பட்ட ஜனங்களாகவும் இருக்கிறோம். அப்பொழுது வெளிப்புற உலகம் முழுவதுமே மரித்துவிட்டதாக நமக்கு காணப்படுகிறது. நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறோம், மனிதனாலே அல்ல. 14எல்லாமே அன்பில் முடிவடைகின்றது. அநேக முறை இதைக் குறித்து உங்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. சிறந்த வேத பண்டிதர்கள் அன்பைக் குறித்து என்னைக் காட்டிலும் அதிகமாக போதித்து வந்துள்ளனர். ஆனால் உங்களிடம் இதை கூற விரும்புகிறேன். ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் இருந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பானானால், தவறிழைத்த ஒருவனை அவன் பொறுத்துக் கொண்டு, அவனிடம் நீடிய பொறுமையுடனும், அன்புடனும், பொறுமையுடனும் நடந்து கொள்வான் அப்படிபட்டவன் இனிமையாகவும், எளிமையாகவும், விசுவாசமுள்ளவனாகவும், பரிசுத்த ஆவியில் நிறைந்தவனாகவும் இருந்து எதிர்மறையாக சிந்திக்காமல், எல்லாவற்றையும் உறுதியாக விசுவாசிப்பான். அவன் வித்தியாசமுள்ள ஒருவனாக இருப்பான். “ஓ, நாங்கள் ஒரு காலத்தில் அதை பெற்றிருந்தோம். மெதோடிஸ்டுகளாகிய நாங்கள் கூச்சலிட்ட போது அதை பெற்றுக் கொண்டோம். நாங்கள் கூச்சலிட்டபோது தேசத்தை அடைந்துவிட்டோம்'' என்று கூறும் மனிதனைப் போல் அல்ல அவன். அப்படி செய்வது நல்லது தான். எனக்கும் அதில் நம்பிக்கையுண்டு. பெந்தேகோஸ்தேயினர் அந்நிய பாஷைபேசி, ''அந்நிய பாஷை பேசினவர் அனைவரும் அதைப் பெற்றுக் கொண்டனர் என்றனர். ஆனால் அந்நிய பாஷை பேசும் அநேகர் அதை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் இப்பொழுது... 15இப்பொழுது நாம் உலகத்தோற்றத்துக்கு முன்பிருந்தே மறை பொருளாயிருந்து வந்து, இக்கடைசி நாட்களில் தேவனுடைய புத்திரருக்கு வெளிப்படும் அந்த மகத்தான பரம ரகசியத்திற்கு வந்திருக்கிறோம். தேவனுடைய புத்திரர் வெளிப்படுவார்கள் என்பது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்களா? நாம் வேறெதாவது ஒன்றை சிந்திப்பதற்கு முன்பு, ஒரு நிமிடம் ரோமர்: 8-ம் அதிகாரத்திற்கு வேதாகமத்தை திருப்புவோம். அதிலிருந்து ஒன்றை நான் உங்களுக்குப் படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பதுடன் அது இணைகின்றதா என்று பார்ப்போம். இப்பொழுது நாம் ரோமர்: 3-ம் அதிகாரம் 19-ம் வசனம் படிக்கப் போகிறோம்; ரோமர்: 8-ம் அதிகாரம். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்து ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது. 16சிருஷ்டி முழுவதும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. பாருங்கள், வெளிப்படுவதற்காக வெளிப்படுதல் என்றால் என்ன? அறியப்படுதல். முழு உலகமும். அங்குள்ள முஸ்லிம்களும் கூட அதை எதிர் நோக்கியிருக்கின்றனர். சுற்றிலும், எல்லாவிடங்களிலும் ''அவர்கள் எங்கே?'' என்று எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். நமது மத்தியில் பலத்த காற்று உண்டானது. நம்மிடையே இடிமுழக்கங்களும் மின்னல்களும் தோன்றின. நம்மிடையே எண்ணெயும் இரத்தமும் தோன்றின... எல்லாவித காரியங்களும் சம்பவித்தன. ஆனால் நாமோ அந்த தீர்க்கதரிசியைக் கவர்ந்த அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்கத் தவறினோம். அந்த சத்தம் தீர்க்கதரிசி தன் சால்வையைப் போர்த்துக் கொண்டு, வெளியே வந்து, “இதோ இருக்கிறேன் ஆண்டவரே” என்று கூறத் தூண்டியது. பாருங்கள்? 17சர்வ சிருஷ்டியும் தவித்து தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. சபையை முதலாவதாக அதற்குரிய இடத்தில் பவுல் பொருத்துகின்றான். நமக்கு ஒரு ஆதாரமாக இருக்க அதை மீண்டும் படிப்போம். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு (அதாவது பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு) எழுகிறதாவது. வகுப்பு இதை மறக்காமலிருக்க மறுபடியும் கூறுகிறேன். நாம் எவ்விதம் கிறிஸ்துவுக்குள் வர முடியும்? ஒரு சபையை சேர்ந்து கொள்வதன் மூலமா? அல்லது ஒரு உத்தியோகத்தை வகிப்பதன் மூலமா? அல்லது தண்ணீரில் மூழ்குவதன் மூலமா? நாம் எப்படி கிறிஸ்துவுக்குள்ளாவது? Iகொரிந்தியர்: 12-ம் அதிகாரம் “ஒரே ஆவியினாலே, (அதாவது பரிசுத்த ஆவியினாலே) நாம் எல்லாரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.'' 18வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தேசத்தில் உள்ள எல்லாமே நமக்குச் சொந்தமானது. சகோதரன் காலின்ஸ், அதை கவனித்தீர்களா? பாருங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலுள்ள அனைத்துமே. இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் வந்தபோது அவர்கள் எல்லாவற்றையுமே யுத்தம் செய்து மேற்கொண்டனர். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இந்த தேசத்தில் நீங்கள் வியாதியினின்றும், தொல்லைகளினின்றும் விலகிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இது மாத்திரம் கூறப்பட்டுள்ளது (ஓ, இது உங்களில் ஆழமாக பதியட்டும்). அது உங்களுடையது என்று கூறுகின்றது. எனவே எழுந்து அதை பெற்றுக் கொள்ளுங்கள். பாருங்கள்? 19இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு மனிதனையாகிலும் இழந்தார்களென்றால், பாவம் பாளையத்தில் பிரவேசித்த போது மாத்திரமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாமும் தோல்விடையக் கூடிய ஒரே வழி, நமது பாளையத்தில் பாவம் பிரவேசிக்கும் போது மாத்திரமே அப்பொழுது எங்கோ தவறு நேர்ந்துள்ளது என்று அர்த்தம். ஆகான் அந்த பொன் பாளத்தையும், அந்த பாபிலோனிய சால்வையையும் திருடி வைத்துக் கொண்ட போது, பாவம் பாளையத்தில் காணப்பட்டது. எனவே யுத்தத்தில் தோல்வி ஏற்பட்டது. கரை திறையற்ற இந்த சபையை, தேவனுடைய வாக்குத்தத்தத்தில் பரிபூரணமாய் நிலைநின்று பரிசுத்த ஆவியில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் கொண்ட ஒரு குழுவை, இன்றிரவு எனக்குத் தாருங்கள். அப்பொழுது நான் எத்தகைய வியாதியையும், அது எப்படிப்பட்ட ஜோலூயிஸாக இருந்தாலும் சரி (ஜோலூயிஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரன் - தமிழாக்கியேன்), அது எத்தகைய அவிசுவாசிகளாயிருப்பினும், எவ்வளவு பயங்கர வியாதியுடையவர்களாயிருந்தாலும், அவர்களை இங்கு கொண்டு வரும்படி சவால்விடுவேன். அவர்கள் பூரண சுகம் பெற்று திரும்பி செல்வார்கள். ஆம், ஐயா. தேவன் அத்தகைய வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவிசுவாசம் என்னும் பாவம் மாத்திரமே அதை தடுத்து நிறுத்த முடியும். இந்த சிறிய பாவம் என்னவென்பதைக் குறித்து சிறிது நேரத்தில் நாம் பார்க்கப் போகிறோம். ...கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 20நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் போது, நமக்கு ஆவிக்குரிய ஆசிர்வாதம் கிடைக்கின்றது. ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குப் புறம்பே நமக்கு உணர்ச்சிகள் (sensations) மாத்திரமே தோன்றுகின்றன. கிறிஸ்துவுக்குள் நமக்கு உறுதியான ஆசிர்வாதங்கள் கிடைக்கின்றன. பாவனை விசுவாசம், ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றை பாவனை செய்வது போன்றதல்ல அது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருப்பதாக கூறிக் கொண்டு, உண்மையில் நீ அங்கிராமல் போனால், உன் பாவம் உன்னைக் கண்டு பிடிக்கும், முதலாவதாக, நீ அங்கு தடுமாறுபவனாகக் காணப்படுவாய். நீ பேசிக் கொண்டிருக்கும் விஷயம் உன்னிடமில்லை என்பதை கண்டு கொள்வாய், ஆனால் நீ கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் உனக்கு பரலோக சமாதானம், பரலோக ஆசிர்வாதம், பரலோக ஆவி இவ்வனைத்தும் வாக்குத்தத்தம் செய்துள்ளார். எல்லாமே உனக்கு சொந்தமாகிவிடுகின்றது. அப்பொழுது நீ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருந்து கொண்டு, எல்லாவற்றையும் உனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறாய். ஆமென். எவ்வளவு அழகாயுள்ளது! ஓ, நாம் தொடர்ந்து படிப்போம். இங்கு தான் சபை பயங்கரமாக இடறுகிறது. தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே (யாருக்குள்?) கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே 21ஆதியாகமத்திலும், வெளிப்படுத்தல் 17-லும் அவர் உலகத் தோற்றத்துக்கு முன்பே நம்மை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டதாக நாம் பார்க்கிறோம். ...முன் குறித்திருக்கிறார். 'முன் குறித்தல்' என்பதில் சற்று நிறுத்த விரும்புகிறேன், 'முன் குறித்தல்' என்பது, நான் சகோ. நெவிலைத் தெரிந்து கொள்கிறேன், சகோ. பீலரைத் தெரிந்து கொள்ளமாட்டேன் என்னும் அர்த்தம் கொண்டதல்ல. அது அப்படியல்ல. யார் சரியாக இருப்பாரென்றும், யார் தவறாக இருப்பாரென்றும் தேவனுடைய முன்னறிவு அறிந்து கொள்கிறது எனவே தேவன் தமது முன்னறிவின்படி யார் என்ன செய்வார்கள் என்பதை அறிந்தவராய், அவருடைய முன்னறிவினால் முன்குறித்து, தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும்படி செய்து, இனி வரப்போகும் காலத்தில் கிறிஸ்து இயேசு என்னும் ஒரே நபரில் அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறார். 22ஒரு உதாரணத்தை இங்கு கூறுவது நலமென்று கருது கின்றேன். அன்றிரவு அதைக் குறித்து சற்று பேசினேன் என்று நினைக்கிறேன். ஆதி: 1:6-ல் தேவன் தம்மை “தேவனாகிய கர்த்தர், என்னும் நாமத்தில் அழைத்துக் கொண்ட போது, அது ஏல், ஏலோகிம் என்பதாயிருந்தது. அதற்கு தன்னில் தான் வாழ்பவர்'' (Self-existing one) என்று பொருள். அவரைத் தவிர வேறொன்றும் அப்பொழுது இருக்கவில்லை. அப்பொழுது காற்றோ, வெளிச்சமோ, நட்சத்திரங்களோ வேறெதுவும் இருக்கவில்லை. தேவன் மாத்திரமே தனித்திருந்தார் - ஏல், ஏலா, ஏலோகிம். 23அவருக்குள் தன்மைகள் (attributes) குடி கொண்டிருந்தன... இந்த மகத்தான ஏல், ஏலா, ஏலோகிம் என்பவருக்குள் தன்மைகள் இருந்தன. தன்மை என்றால் என்ன தெரியுமா? சுபாவம். அதை தான் மகன் பெற்றுக் கொள்கிறான். அவ்விதமாக அதை பெற்றுக் கொண்ட அநேக பிள்ளைகளில் நானும் ஒருவன். அவருக்குள் பிதா என்னும் தன்மை குடி கொண்டிருந்தது. அவர் தனிமையில் வாழ்ந்திருந்தார். அவர் பிதாவாவதற்கு அப்போது ஒன்றுமில்லை. அதைத் தவிர அவருக்குள் தேவன் என்னும் தன்மையும் குடி கொண்டிருந்தது. தேவன் என்பவர் வழிபாட்டிற்குரியவர். ஆனால் அவரோ தனிமையில் வாழ்ந்து வந்தார் - ஏல், ஏலா, ஏலோகிம். எனவே அவரை வழிபடுவதற்கு அப்பொழுது ஒன்றுமில்லை. அவருக்குள் இரட்சகர் என்னும் தன்மை குடிகொண்டிருந்தது. ஆனால் அவர் சுகமளிப்பவர் என்னும் தன்மை குடிகொண்டிருந்தது. ஆனால் அவர் சுகமளிக்க யாருமே அப்பொழுது வியாதியாயிருக்கவில்லை. உங்களுக்கு அந்த காட்சி விளங்குகின்றதா? எனவே அவருடைய தன்மைகள் இன்றுள்ளதை தோன்றச் செய்தன. 24சிலர், ''அதை ஏன் தேவன் தொடக்கத்திலேயே நிறுத்திவிடக் கூடாது?'' என்று கேட்கின்றனர். ஜோலூயிஸ் ஒரு முறை, ''அவர் கடூர இருதயமுள்ளவர்“ என்று, அவனைக் கடிந்து கொண்ட ஜாக் கோ (Jack Coe)விடம் கூறினானாம். அவன், ''தேவன் என்று ஒருவர் கிடையவே கிடையாது. அப்படியிருந்தால் அவர்...'' என்று கூறி எல்லா வசைச் சொற்களையும் அவருக்கு விரோதமாக உரைத்தான். ஒருக்கால் அவனுக்கு இங்கு நிறைய ஞானம் இருந்திருக்கலாம். ஆனால் கீழே இருதயத்தில் அவனுக்கு ஒன்றுமில்லை. அங்கு தான் காரியம் அடைந்துள்ளது. பாருங்கள்? அவர் அதை மறைத்திருந்ததாக தேவனுடைய வார்த்தை இங்கு கூறுகின்றது. இந்த இரகசியங்கள் உலக தோற்றம் முதல் மறைபொருளாயிருந்து வந்து, தேவனுடைய புத்திரர்கள் வெளிப்படுவதற்காக காத்திருந்து, இப்பொழுது சபைக்கு அறிவிக்கப்படுகின்றது. ஓ, என்னே! உங்களுக்குப் புரிகின்றதா? 25என் கதையை சற்று நிறுத்திவிட்டு; இல்லையேன்... என்னுடைய அடுத்த கருத்துக்குச் செல்கிறேன். மோசேயின் காலம் முதற்கொண்டு, தீர்க்கதரிசிகளின் காலம் பூராவும், இந்த காரியங்கள் கடைசி நாட்களில் அறிவிக்கப்படுவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர் என்று வேதம் கூறுகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உண்மை. அது தேவனுடைய புத்திரர்களுக்கு வெளிப்பட வேண்டியதாயுள்ளது. ஏன்? நான் கூறின விதமாக, கூர் நுனிக்கோபுரத்தைப் போன்று அருகில், அருகில் கட்டிக் கொண்டு வருதல். 26நான் அடிக்கடி கூறுவது போல், தேவன் மூன்று வேதாகமங்களை இயற்றினார். முதல் வேதாகமத்தை அவர் வானத்தில் வைத்தார் - இராசிகள். நீங்கள் எப்பொழுதாவது இராசிகளை பார்த்ததுண்டா? இராசிகளின் முதலாவது உருவம் எது? கன்னிராசி. இராசிகளின் கடைசி உருவம் எது? சிம்மராசி. அவர் முதன்முறையாக கன்னியினிடத்தில் வந்தார். இரண்டாம் முறை அவர் யூதா கோத்திரத்து சிங்கமாக வருவார். பாருங்கள்? அடுத்த வேதாகமத்தை அவர் ஏனோக்கின் காலத்தின் கூர் நுனிக் கோபுரத்தில் வைத்தார். அவர்கள் அதை அளந்து பார்க்கின்றனர். எனக்கு அது புரியவில்லை. அவர்கள் அதனுள் சென்று, முழங்காலில் அதிக நேரம் நின்று, யுத்தங்களின் இடையேயுள்ள தூரத்தை அளக்க முடிகின்றது. இப்பொழுது அவர்கள் அளந்து, எங்கு வந்திருக்கின்றனர் தெரியுமா? இராஜாவின் அறைக்கு. இந்த கூர்நுனிக் கோபுரம் மேலே செல்லச் செல்ல ...நம்மிடையேயுள்ளவைகளைக் கொண்டு நம்மால் ஒரு கூர்நுனிக் கோபுரத்தைக் கட்ட முடியவில்லை. நம்மால் முடியவேயில்லை. 27அது மேலே செல்லச் செல்ல குறுகலாக ஒரு நுனியை அடைவது போல் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தலைக்கல் அதில் இல்லை. கூர்நுனிக் கோபுரத்தின் உச்சியில் அவர்கள் தலைக்கல்லை வைக்கவில்லை. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ என்று எனக்குத் தெரியாது. எகிப்திலுள்ள பெரிய கூர்நுனிக் கோபுரத்தில் தலைக்கல் கிடையாது. ஏன்? ஏனெனில் தலைக்கல் புறக்கணிக்கப்பட்டது. கிறிஸ்துவாகிய தலைக்கல் புறக்கணிக்கப்பட்டார். ஆனால் நாம் லூத்தரின் காலம், பாப்டிஸ்டு காலம் மெதோடிஸ்டு காலம், பெந்தேகோஸ்தே காலம் என்று இவ்விதம் வளர்ந்து கொண்டே வந்து தலைக்கல்லை அணுகினவர்களாய், தலைக்கல் இறங்கி வந்து அமர்ந்து, கட்டிடம் பூர்த்தியாக வேண்டுமென்று ஆவலுடன் காத்திருக்கிறோம். ''ஆகாதென்று கல் தள்ளப்பட்டது“ என்று நீங்கள் வேதத்தில் வாசித்திருக்கிறீர்கள் அல்லவா? அது சாலோமோனின் ஆலயத்தைக் குறிக்கிறதென்பது உண்மை. ஆனால் ''ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று உங்களுக்கு சித்திர வடிவில் காண்பிப்பதற்கெனவே இதை கூறுகிறேன். இப்பொழுது வேத வாக்கியங்களின்படி நாம் கடைசி காலத்தில், கூர்நுனிக் கோபுரத்தின் தலைக்கல் வரவேண்டிய காலத்தில், இராசிகளின்படி மகரராசியின் சமயத்தில், சிங்கம் வரப்போகும் தருணத்தில், தேவனுடைய புத்திரர்கள் - எலியா - வெளிப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தீர்களா? நாம் முடிவு காலத்திற்கு வந்துவிட்டோம். 28உங்களில் எத்தனை பேர் இந்த வாரம் செய்தித்தாளைப் படித்தீர்கள்? க்ரூஷேவும் மற்றவர்களும் சொல்வதை கவனித்தீர்களா? ஓ, அவர்கள் ஆயத்தமாயுள்ளனர். நாமும் கூட. ஆமென். என்னே ஒரு சிலாக்கியம், என்னே ஒரு காலம்! நாம் எந்த நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்று கிறிஸ்தவர்கள் மாத்திரம் அறிந்து கொண்டால் என்னே! இப்புத்தகத்தை எழுதியவன் (பவுல்), இக்கடைசி நாட்களில் அது எங்கு வெளிப்படுமென்றும், தேவனுடைய புத்திரர்கள் கடைசி நாட்களில், யுகத்தின் முடிவில், பரிசுத்த ஆவியின் வல்லமையுடன் எழும்பி, உலகத்தோற்ற முதற்கொண்டு மறைபொருளாயிருந்து வந்த இரகசியங்களை வெளிப்படுத்துவதை காண்பதற்கு. எவ்வளவாய் தவித்து வேதனைப்பட்டிருப்பான் என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 29நாம் மறுபடியுமாக, நாம் சரியா தவறா என்னும் வெளிப்பாட்டைப் பெற, ''உலகத் தோற்றத்துக்கு முன்'' என்பதற்கு செல்வோம். தேவனை ''தந்தை'' (papa) என்று அழைப்பதால் அவரை அவமானப்படுத்துவதாக எண்ண வேண்டாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் கூற வேண்டுமென்று அவரை 'தந்தை' என்று அழைக்கிறேன். தந்தைக்கு சில பிள்ளைகள் வேண்டுமென்று விருப்பம் தோன்றியது. முதலில் அவர் என்ன செய்தார்? அவர், ''தேவ தூதர்கள் தோன்றக் கடவர்கள்'' என்றார். அப்பொழுது அவரைச் சுற்றிலும் தேவதூதர்கள் அவரை வணங்கினர். அப்பொழுது தான் அவர் தேவன் ஆனார் - அவருடைய தன்மை. கவனியுங்கள். ஏலா, ஏலோகிம், தனிமையில் வாழ்பவராயிருந்தார். அவரைத் தவிர அப்பொழுது வேறு யாருமில்லை. முதலில் தோன்றினது தேவதூதர்கள். அவர்கள் அவரை வணங்குவதைத் தவிர வேறொன்றையும் செய்வதில்லை. அவர்கள் விழுந்து போக முடியாது. அவர்கள் வியாதிப்பட முடியாது. அவர்கள் அழிந்து போகக் கூடாதவர்கள். எனவே அவர்களின் மூலம் அவருடைய சுகமாக்கும் வல்லமையையோ, அல்லது இரட்சிக்கும் தன்மையையோ வெளிப்படுத்த முடியாது. 30அதன் பின்பு அவர், ''நாம் ஸ்தூலமான (tangible) ஒன்றை செய்வோம்'' என்று எண்ணினார். எனவே அவர் பூமியைப் படைத்தார். எல்லாமே பூமியிலிருந்து தோன்றின. ஒரு தவளைக் குட்டி அல்லது ஜெல்லி மீனிலிருந்து அவர் தொடங்கினார். அது தண்ணீரில் மிதக்கும் தாழ்வான ஜீவனைக் கொண்டது தவளை என்று அவர்கள் கூறுகின்றனர். மிகவும் உயரிய ஜீவன் மனிதனாகும். அது தவளையிலிருந்து தொடங்கி பல்லிக்கு (lizard) வந்தது. பல்லியிலிருந்து அது ஒவ்வொன்றாக - ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியானவர் “ஊஷ்'' என்று ஊதினபோது, மேலும், மேலும் உயர்ந்த ஜீவன் தோன்றத் தொடங்கினது. ஆனால் தேவனுடைய சாயலில் முதன் முறையாகத் தோன்றினது மனிதனே. இதற்கு முன்போ அல்லது பின்னரோ மனிதனைக் காட்டிலும் உயரிய ஒன்று சிருஷ்டிக்கப்பட மாட்டாது. ஏனெனில் மனிதன் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டவன். பாருங்கள்? பின்பு மனிதன்... 31அவர் முதலாவது மனிதனை படைத்தபோது... அவர் தேவ தூதர்களை சிருஷ்டித்த பின்பு... மனிதனைப் படைத்தார். அவர் ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். (ஆதி. 1:27) - ஒரே சரீரத்தில் இரண்டும். அவன் ஆணாகவும் பெண்ணாகவும் இருந்தான். அவர் ஆதாமை சிருஷ்டித்து அவனை மாமிச சரீரத்தில் வைத்தபோது... கவனியுங்கள். ஆதியாகமம். 1-ல், அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். ஆதியாகமம். 2-ல், நிலத்தைப் பண்படுத்த எந்த மனிதனும் இல்லாததால் மாமிச மனிதன் அப்பொழுது உண்டாகின்றான். நிலத்தைப் பண்படுத்த எந்த மனிதனும் அப்பொழுது இல்லை; அச்சமயம் மனிதன் தேவனுடைய சாயலில் இருந்தான். தேவன் எப்படியிருக்கிறார்? (“ஆவியாயிருக்கிறார்” என்று சபையோர் பதிலளிக்கின்றனர் - ஆசி). அது உண்மை பாருங்கள்? அவர் முதலாம் மனிதனை சிருஷ்டித்தார். “ஆணும், பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்”. அவர் முதலாம் மனிதனை படைத்தபோது... 32கவனியுங்கள், அவையனைத்தும் அவர் சிந்தையில் இருந்தன. அதைக் குறித்து ஞாயிறு இரவு நான் பேசினேன். சிந்தை வெளிப்படுவதே வார்த்தையாகும். தேவன் தாம் எவ்வாறு தேவனாயிருக்க முடியுமென்றும், எவ்வாறு அவர் வணங்கப்பட முடியுமென்றும், எவ்வாறு அவர் சுகமாக்குபவராகவும், இரட்சகராகவும் இருக்க முடியுமென்றும் சிந்தையில் எண்ணினார். அவர் சிந்தையிலிருந்ததை வார்த்தையாக பேசின மாத்திரத்தில், அது எந்த காலத்திலும் நிறைவேறும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஓ, இந்த தேவனுடைய புத்திரர் மாத்திரம் அந்த வார்த்தையை இறுகப்பிடித்துக் கொண்டால் தேவன் ஒரு வார்த்தையைப் பேசுவாரானால், அது முற்றிலும் நிறைவேறியே தீரவேண்டும். ஒருக்கால் அது நிறைவேற காத்திருக்க வேண்டியதாயிருக்கும். புவியியல் விஞ்ஞானிகள், இவ்வுலகம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருவதாகக் கூறுகின்றனர். அது எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்று எனக்குத் தெரியாது. தேவன் காலத்தில் வாழ்பவரல்ல, அவர் பேசினபோது இருந்த காலத்தை விட அவருக்கு இப்பொழுது காலம் குறைந்துவிடவில்லை. அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். அவருக்குக் காலம் என்பது கிடையவே கிடையாது. அன்று காலை வரை நான் அதை அவ்விதமாக புரிந்து கொள்ளவில்லை. நித்தியம் என்பதற்கு நேற்று, நாளை என்பது கிடையாது. எல்லாமே நிகழ்காலம் தான். “இருக்கிறேன்'' (I AM) என்னும் பதத்தை நீங்கள் எப்பொழுதாவது கவனித்ததுண்டா? ”இருந்தேன்'' அல்லது “இருப்பேன்'' என்றல்ல. ”இருக்கிறேன்'' என்பது நித்தியமான ஒன்றாகும். பாருங்கள், எக்காலத்தும் “இருக்கிறேன்'' 33ஆனால் அவர், காலத்தில் காரியங்களை சிருஷ்டிக்க எண்ணம் கொண்டார். அவரை வழிபட அவர் ஒன்றை சிருஷ்டிக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவருடைய தன்மைகள் இவைகளை தோன்றச் செய்தன. பின்பு அவர் மனிதனைப் படைத்தார். மனிதன் தனிமையில் காணப்பட்டான். அவருடைய மகத்தான சிந்தையில் கிறிஸ்துவைக் குறித்தும் சபையைக் குறித்தும் எத்தகைய காட்சி இருந்தது என்பதைக் காண்பிக்கக் கருதி, அவர் வேறொரு களி மண்ணை எடுத்து பெண்ணை சிருஷ்டிக்காமல், ஆதாமின் விலாவிலிருந்து அவர் ஒரு எலும்பை எடுத்து, ஆதாமின் ஆவியிலிருந்து பெண்ணின் ஆவியை அவர் பிரித்து, அதை அந்த விலா எலும்புக்குள் வைத்தார். ஒரு மனிதன் பெண்ணைப் போல் நடந்து கொண்டால் அவனிடம் ஏதோ கோளாறு உள்ளது. அவ்வாறே ஆணைப் போன்று நடக்க விருப்பம் கொள்ளும் பெண்ணை நீங்கள் காணும் போது, ஏதோ கோளாறு அங்குள்ளது. பாருங்கள், அவை வித்தியாசமான இரு ஆவிகள். அவை ஒன்று சேரும் போது, ஒருமைப்பட்டுவிடுகின்றது. இவ்விருவரும் ஒன்றாயிருக்கிறார்கள். எனவே அவர் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்தார். அவர்கள் வயோதிபராவதில்லை, மரிப்பதில்லை, தலை நரைப்பதில்லை, அவர்கள் நம்மைப் போலவே புசித்து, குடித்து, உறங்கினர். பாவம் என்பது என்னவென்று அவர்கள் அறியாமலிருந்தனர். 34நான் இதை விட்டு கடந்து சற்று நேரம் வேறொரு பாடத்திற்கு - 'சர்ப்பத்தின் வித்து' என்ற பாடத்திற்கு செல்ல விரும்புகிறேன். இதை மறுபடியும் விளக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். யாராகிலும் இதை வேறுவிதமாக என்னிடம் காண்பிக்கட்டும் பார்க்கலாம். அதை நான் அறிய விரும்புகிறேன். இதற்கெல்லாம் பின்னர், பாவம் நுழைந்த போது என்ன நிகழ்ந்தது? கோடி, கோடி, கோடிக்கணக்கான மைல்களுக்கப்பால் இவ்வளவு பெரிய ஒரு இடம் உள்ளது. அது தான் பரிபூரணமான தேவ அன்பு. அவ்விடத்தை விட்டு ஒரு அடி தூரம் சென்றால், அது சற்று குறைந்துவிடுகின்றது. அது பூமியை வந்து அடையும்போது, எவ்வளவு சிறிதாகிவிடுகின்றது என்று நீங்கள் காணலாம். அது நிழல்களின் நிழலின் நிழலாகிவிடுகின்றது. அதை தான் நீங்களும் நானும் பெற்றிருக்கிறோம் - தேவனுடைய அன்பின் நிழல்களின் நிழலின் நிழல் மாத்திரமே. 35உங்களில் ஏதோ ஒன்றுள்ளது. இருபது வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும், ஆணின் உள்ளத்திலும் ஏதோ ஒன்று நிலையாக இருக்க விருப்பங் கொள்கிறது. நீங்கள் பதினைந்திலிருந்து இருபது வயதையடைய ஐந்தாண்டுகள் மாத்திரமேயுள்ளன. இருபது வயதிற்குப் பிறகு நீங்கள் மரிக்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் பதினைந்து வயதையடையும் வரை ஒரு சிறு பருவத்தில் இருக்கிறீர்கள். அதன் பின்பு இருபது வயது வரை நீங்கள் முதிர்வடைகின்றீர்கள். இருபது வயது கடந்த பின்பு, ''ஓ, நான் இப்பொழுது மனித பருவத்தையடைந்துவிட்டேன் என்கிறீர்கள். அப்படி நீங்கள் கூறுகின்றீர்கள்“, ஆனால் நீங்கள் அடையவில்லை. நீங்கள் என்ன செய்தபோதிலும், சிறிது சிறிதாக மரித்து எரிந்து போகத் தொடங்குகிறீர்கள், தேவன் உங்களை ஒரு பிரத்தியேக வயது வரைக்கும் கொண்டு வருகிறார். அதன் பின்பு நீங்கள் மரிக்கவேண்டும். ஆனால் என்ன நிகழ்கின்றது? நீங்கள் மரிக்கத் தொடங்கும்போது, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, ''நான் மறுபடியும் பதினெட்டு வயதுள்ளவனாக இருக்க விரும்புகிறேன்'' என்கின்றது. 36உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் 500 வருடங்களுக்கு முன்பாக பிறந்து, இன்றைக்கும் பதினெட்டு வயதுள்ளவனாக இருந்தால் எப்படி இருக்கும்? நீ 500 வருடங்களுக்கு முன்பிருந்த பழைமையான கருத்துகளைக் கொண்டிராமலிருந்தால்! யாத்திரீகப் பிதாக்கள் இங்கு வருவதற்கு முன்பே நீ ஒரு வாலிபப் பெண்ணாக இருந்து, அக்காலத்து பழமையான கருத்துக்களை கொண்டிருப்பாயானால் அதைவிட உனக்கு வயதாகி 500 வருடங்கள் வாழ்ந்து கழிப்பதே நலமாயிருக்கும். பாருங்கள், அவ்வாறு இராமற்போனால், எங்கோ தவறுள்ளது. இப்போழுது நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, எனக்கு பதினாறு வயதாகின்றது, பதினெட்டு வயதாகின்றது. நான் நலமாக இருக்கிறேன்'' என்று கூறலாம். அன்பே, உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். உங்கள் தாயார் இன்று சபையில் இராமல் போயிருந்தால், இந்த நிமிடம் உயிர் வாழ்ந்திருப்பாள் என்பது என்ன நிச்சயம்? உன்னுடைய ஆண் நண்பனோ அல்லது பெண் சிநேகிதியோ, சில நிமிடங்களுக்கு முன்பு விபத்தில் கொல்லப்படவில்லை என்பது என்ன நிச்சயம்? நாளை காலை நீ உன் வீட்டில் சவமாக கிடக்கமாட்டாய் என்று என்ன நிச்சயம்? அவ்வளவு நிச்சயமற்றதாய் வாழ்க்கை அமைந்துள்ளது, எதுவுமே நிச்சயமில்லை. உனக்குப் பதினைந்து வயதாயிருந்தாலும், பன்னிரெண்டு, பத்தொன்பது, எழுபத்தைந்து அல்லது தொண்ணூறு வயதாயிருந்தாலும், எல்லாமே நிச்சயமற்றதாயுள்ளது. நீ எந்நிலையிலிருக்கிறாய் என்று உனக்குத் தெரியாது. ஆயினும், நீ பதினைந்து, பதினெட்டு வயது பருவத்தை அடைய விரும்புகிறாய். எது அப்படி உன்னைச் செய்யத் தூண்டுகிறது? 37நீ பதினெட்டு வயது பருவத்தையடைந்து, அதிலே நிலை கொண்டிருந்து, வியாதிப்படாமல் உயிர் வாழ்வாயானால், உன்னைப் போன்ற மற்றவர்களும் உன்னுடன் அந்நிலையில் இருக்க வேண்டும். இல்லையேன் மற்றவர்கள் வயது கடந்து மரித்து, வேறு காலத்துக்குள் சென்றுவிடுவார்கள். அப்பொழுது நீ பழைமையானவனாகிவிடுவாய். அப்பொழுது உன் நிலைமை மோசமாகிவிடும். எனவே உனக்குள்ள ஒன்று அவர்களுடன் கூட இருக்க உன்னை அழைக்கின்றது. அது தான் அந்த சிறியதேவ அன்பு (agapao)... அந்த சிறிய நிழல் இங்கிருந்து மேலேயுள்ள ஒன்றிற்கு அழைக்கிறது. 38அன்றொரு நாள் இரவு - இல்லை, காலை 7 மணிக்கு பரிசுத்த ஆவியானவர் தமது நன்மையினாலும் கிருபையினாலும் என்னை இந்த சரீரத்திலிருந்து கொண்டு சென்றபோது, அப்படித்தான் என்று நம்புகிறேன். அப்படித்தானோ இல்லையோ என்று கூறத் தெரியவில்லை - அந்த தேசத்திற்குள் பிரவேசித்து, அங்கிருந்த ஜனங்களைக் கண்டபோது, அவர்கள் எல்லோரும் வாலிபராயிருந்தார்கள். என் வாழ்கையிலேயே நான் கண்டேன், அவர் என்னிடம், அவர்களில் சிலர் 90 வயது நிரம்பினவர்களாயிருந்தனர். அவர்கள் உன் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் உன்னைக் கண்ட மாத்திரத்தில், “சகோதரனே, சகோதரனே என்று கூக்குரலிடுவதில் வியப்பொன்றுமில்லை'' என்றார். அது வானத்துக்குரிய சரீரம். நாம் மரித்த பின்பு ஒரு கட்டுக் கதையாகி (myth)விடுவதில்லை. நாம் ஒரு சரீரத்தில் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மரிக்க நேரிட்டால், இந்த நிமிடத்தில் அணுகுண்டு நம்மை அழித்து போடுமானால், இன்னும் ஐந்தே நிமிடங்களில் நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி கட்டித்தழுவி, சத்தமிட்டு தேவனை மகிமைப்படுத்திக் கொண்டிருப்போம். ஆம், ஐயா! இங்கு அமர்ந்துள்ள சகோதரன், சகோதரி ஸ்பென்சர் மிகவும் வயோதிப தம்பதிகளுள் ஒருவர். அவர்கள் அப்பொழுது பதினெட்டு இருபது வயதினரைப் போல் இருப்பார்கள். சகோ. நெவில் ஒரு வாலிபனாயிருப்பார். நானும் ஒரு வாலிபனாயிருப்பேன். நாமெல்லாருமே... அது முற்றிலும் உண்மை! ''பூமிக்குரிய கூடாரமாகிய இந்த வீடு அழிந்து போனாலும், நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்துக் கொண்டிருக்கிறது.'' 39ஒரு சிறு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிவரும் போது, அது இயற்கையான பிறப்பு. அந்த சிறு சரீரம் கால்களை முறுக்கிக் கொண்டு குதிக்கின்றது. வாலிபப் பெண்னே. இதை விவரிப்பதற்காக என்னை மன்னிக்கவும், அக்குழந்தை அவ்வாறு செய்யும்போது, அதன் ஜீவ தசைகள் அசைகின்றன. அது இவ்வுலகில் வந்தவுடன், முதலாவதாக அது தன் மூச்சை இழுக்கின்றது. அந்நேரமே, ஆவிக்குரிய சரீரம் ஒன்று அக்குழந்தையினுள் வந்துவிடுகின்றது. அதை நீங்கள் சும்மாவிட்டுவிட்டால், அது தன் சிறிய தலையை தன் தாயின் மார்பகங்களின் மேல் வைத்து பாலுண்ணத் தொடங்கிவிடுகிறது. அது அப்படி செய்யாவிட்டால், தாயிடமிருந்து பால் சுரக்காது. ஒரு கன்றுக்குட்டி பிறந்தபின்பு, அது காலூன்றி நிற்கும் அளவுக்கு அதற்கு பெலன் வந்தவுடன், அதை கவனித்திருக்கிறீர்களா? அதற்கு யார் கற்றுக் கொடுப்பது? அது நேரடியாக தன் தாயினிடம் நடந்து சென்று பால் குடிக்கத் தொடங்கி விடுகிறது. ஓ, ஆமாம்! 40இப்பூமிக்குரிய சரீரம் இவ்வுலகிற்கு கொண்டு வரப்படும்போது, அதற்காக ஒரு ஆவிக்குரிய சரீரம் ஆயத்தமாயுள்ளது உடனே... ஓ, அல்லேலூயா! ''பூமிக்குரிய கூடாரமாகிய இந்த நம்முடைய வீடு அழிந்து போனாலும், மேலே ஒன்று காத்திருக்கிறது. இந்த சரீரத்தை விட்டு நாம் வெளியே சென்றதும், அந்த சரீரத்துக்குள் நாம் நுழைந்துவிடுகிறோம். அந்த சரீரத்துக்கு குளிர்ந்த பானம் அவசியமில்லை. அது உண்பதில்லை. அது பூமியின் மண்ணினால் உண்டாக்கப்படவில்லை. ஆயினும் அது பூமிக்குரிய சரீரத்தைப் போன்றே தத்ரூபமானதாய், மற்றவர் அதை தொட்டு உணரக் கூடியதாய், அதனுடன் கைகுலுக்குவதாய் அமைந்திருக்கும். அது மற்றவர்களை நேசிக்கும். எல்லாமே பரிபூரணமாயிருக்கும். அப்படிப்பட்ட அந்த சரீரம் மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் மூன்று சரீரங்கள் உள்ளன. அவைகளில் இது ஒன்று. 41இந்த பீடத்தினருகில் தான் உங்கள் நித்திய ஜீவனை நீங்கள் தொடங்குகின்றீர்கள். இங்கு தான் உங்கள் நித்தியத்தை நீங்கள் ஆரம்பிக்கின்றீர்கள், ஓ, இங்கேயே உங்கள் நித்திய ஜீவனை நீங்கள் தொடங்கிவிடுகின்றீர்கள். அப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறந்து தேவனுடைய புத்திரராகின்றீர்கள். நீங்கள் மரிக்கும் போது... மரணம் உங்களை இந்த சரீரத்தில் தாக்கி, உங்கள் இருதயத்துடிப்பு நின்று போய், இந்த ஜீவசக்கரங்கள் சுழலாமல் நின்று விடும்போது, அந்த சிறு நிழல் - நிழல்களின் நிழலாக இருந்த அது - ஒரு நொடியில் நிழலாக மாறி, பின்பு சிறு துளிகளாக மாறி, அடுத்து ஒரு ஓடையாக மாறி, அடுத்து ஒரு நதியாக மாறி, அடுத்து ஒரு கடலாக மாறிவிடுகின்றது சற்று கழிந்து நீங்கள் அக்கரையில் வானத்துக்குரிய சரீரம் என்னும் போர்வையை உடுத்தினவர்களாய் உங்கள் அன்பார்ந்தவர்களின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டு, ஒருவரை சிநேகித்து, மீண்டும் வாலிபனாகவும் வாலிபப் பெண்ணாகவும் மாறிவிடுகின்றீர்கள். அது அப்பட்டமான உண்மை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரைக்கும் அது அங்கு காத்திருக்கிறது. ஒரு நாளில் அவருடைய மகிமையின் சரீரம்... கவனியுங்கள், அது வானத்துக் குரிய சரீரம், மகிமையின் சரீரமல்ல, வானத்துக்குரிய சரீரம். ஒரு நாளில் அந்த வானத்துக்குரிய சரீரம் இயேசுவுடன் கூட பரலோகத்தை விட்டுப் புறப்படும். 42''நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தெசலோனிக்கேயர்: 5-ம் அதிகாரம் இல்லை 1தெசலோனிக்கேயர் 5-ம் அதிகாரம், இவ்விரண்டில் ஒன்று அன்றியும் சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே, அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார். கர்த்தருடைய வருகையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை“ (நித்திரையடைந்தவர்களை தடை செய்வதில்லை என்பதே சரியான வார்த்தை) ஏனெனில் கர்த்தருடைய எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இந்த வானத்துக்குரிய சரீரங்கள் கீழே இறங்கி வந்து, பூமிக்குரிய மகிமையின் சரீரங்களைத் தரித்துக் கொள்ளும். பின்பு உயிரோடிருக்கும் நாமும் ஒரு இமைப் பொழுதில் மறுரூபமாகி, அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம். 43''நான் உங்களுடன் நவமாய் என் பிதாவின் ராஜ்யத்தில் இதை புசிக்கும் வரைக்கும், இனி ஒரு போதும் நான் திராட்ச ரசத்தைப் பானம் பண்ணுவதுமில்லை, புசிப்பதுமில்லை. அது தான் கலியாண விருந்து. மூன்றரை ஆண்டு காலம் அந்திக் கிறிஸ்து உலகில் அரசாண்டு முடிக்கிறான்.முழு உலகமும் அழிக்கப்படுகின்றது. யூதர்கள் வெளியே அழைக்கப்படுகின்றனர். (கிறிஸ்துவாகிய) யோசேப்பு தம்மை யூதர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். யோசேப்பு தன்னை தன் யூத சகோதரர்களுக்கு வெளிப்படுத்தின போது, ஒரு புறஜாதியும் கூட அப்பொழுது அங்கில்லை என்பதை நினைவில் கொள்ளவும்... அந்த வரலாறு உங்களுக்குத் தெரியும். எல்லா வகையிலும் யோசேப்பு கிறிஸ்துவுக்குப் பரிபூரண முன்னடையாளமாக திகழ்ந்தான். யோசேப்பு ஆள் அனுப்பி தன் சகோதர்களை அழைத்தபோது, அவர்கள் வந்தனர். அவன் சிறிய பென்யமீனை உற்று நோக்கினான்... அவர்கள், “என்ன இவன்? நாம் நம்முடைய சகோதரனாகிய யோசேப்பைக் கொன்றிருக்கக் கூடாது'' என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர். அவ்வாறே கிறிஸ்து தம்மை யூதர்களுக்கு வெளிப்படுத்தும் போது, யூதர்கள் தாங்கள் இழைத்த தவறை உணருவார்கள். யோசேப்பு துயரம் மிகுந்தவனாய் இருந்த காரணத்தால் அவனுக்கு, அழ வேண்டுமென்று தோன்றினது. எனவே அவன் தன் மனைவி பிள்ளைகள், காவல்காரர் அனைவரையும் அரண்மனைக்குப் போகும்படி உத்தரவிட்டான். அது முற்றிலும் உண்மை. பின்பு யூதர்களின் முன்பில் அவன் தனிமையாக நின்று கொண்டு, ”நான் தான் சகோதரனாகிய யோசேப்பு. நான் உங்கள் சகோதரன்“ என்று கூறி தன்னை வெளிப்படுத்தினான். அப்பொழுது அவர்கள் நடுக்கமுற்று, ”அவனைக் கொல்ல முயன்றோமே. இப்பொழுது அதற்குரிய பலன் நமக்கு கிடைத்துவிடும். நமது சகோதரனை நாம் கொன்றுவிட்டோம் என்று எண்ணினோமே. அவன் இப்பொழுது பெரிய ராஜாவாக இருக்கிறானே'' என்றனர். அவனோ, “ஜீவனைக் காக்க வேண்டும் என்னும் நோக்கத்திற்காகவே தேவன் இப்படி செய்தார்'' என்றான். புறஜாதியாராகிய நம்மை இரட்சிக்க வேண்டுமெனும் அந்த நோக்கத்திற்காகவே தேவன் அப்படி செய்தார். ஆனால் புறஜாதிகள் அரண்மனையில் இருந்தனர். அல்லேலூயா யோசேப்பு தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு ஒரு புறஜாதி மணவாட்டியைக் கொண்டான் - யூத மணவாட்டியல்ல. சரி. 44இப்பொழுது நாம் எங்கு வந்திருக்கிறோம்? வரப்போகும் அந்த மகத்தான காலத்தில் நாம் மகிமையின் சரீரத்தை தரித்துக் கொள்வோம். வானத்துக்குறிய இந்த சாரம் அப்பொழுது மகிமையின் சரீரமாக மாறும். நான் கூறுவது உங்களுக்குப் புறிகின்றதா? அப்பொழுது நான் நடந்து சென்று, “சகோ. நெவில்'' என்று அவருடன் பேசுவேன். ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். நான், ''சகோ. ஹ்யூம்ஸ், இன்று காலை தந்தையிடம் சொல்லலாம்'' என்பேன். அந்த தந்தை யார் தெரியுமா? அவர்தான் தேவன். அவரை நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். அவர் இரட்சகர், சுகமளிப்பவர். பாவம் சிருஷ்டிக்கப்பட்டது என்பது கிடையவே கிடையாது. கேட்பதற்கு அது அவ்வளவு நன்றாக இல்லை. இல்லையா? பாவம் சிருஷ்டிக்கப்படவில்லை. இல்லை, ஐயா பாவம் தாறுமாறாக்கப்பட்ட ஒன்றாகும். சிருஷ்டி கர்த்தர் ஒருவரே. அவர் தான் தேவன். பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்படுதல் (Perversion). விபச்சாரம் என்பது என்ன? நீதியான ஒரு செயல் தாறுமாறாக்கப்படுதல். பொய் என்பது என்ன? உண்மை தவறாக உரைக்கப்படுதல். நிச்சயமாக. சபித்தல் என்பது என்ன?தேவனுடைய ஆசிர்வாதங்கள் சபித்தலாக மாற்றப்படுதல். எனவே ஆசிர்வாதங்களுக்குப் பதிலாக அவர்கள் சாபத்தைப் பெற்றனர். பாவம் என்பது சிருஷ்டிப்பல்ல. அது தாறுமாறாக்கப்பட்ட ஒன்று. சாத்தானால் பாவத்தை சிருஷ்டிக்க முடியவில்லை. எனவே தேவன் சிருஷ்டித்ததை அவன் தாறுமாறாக்கினான். அது முற்றிலும் உண்மை. மரணம் என்பது ஜீவன் தாறுமாறாக்கப்படுதல். 45இதை கவனியுங்கள், இதை கவனியுங்கள். நான் நடந்து சென்று, ''சகோ. ஹ்யூம்ஸ், நீங்களும் நானும் சகோ. பீலரும் இன்னும் சில சகோதரர்களும் நமது தந்தையிடம் போகலாம்'' என்பேன். நான் மேலும், ''நாம் சுற்றுப் பயணம் செய்யலாம். நீங்கள் பூமியிலிருந்த போது மலைகளை விரும்பினீர்கள் அல்லவா?'' ''ஆம், நிச்சயமாக.'' ''அப்படியானால் கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் அந்த புதிய உலகில், சில உள்ளன. அங்கு சென்று உலாவி வாருங்கள்.'' ''சூரியன் உதிப்பதற்காக ஒவ்வொரு நாளும் அதை நான் உதிக்கச் செய்ய வேண்டும்.'' ''நான் மறு உத்தரவு கொடுப்பேன். அவர்கள் பேசும் போதே நான் கேட்பேன்'' ஏசாயா: 66. அது உண்மை. 46உங்களுக்குத் தெரியுமா, அங்கு நான் நடந்து கொண்டிருப்பேன், நாமெல்லாரும் அங்கு ஐந்நூறு ஆண்டு காலமாக நடந்து கொண்டிருப்போம். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளுடன் அதை ஒப்பிடும் போது, அது ஒரு சிறு பயணமாகவே அமைந்திருக்கும். நான் கூறுவது பைத்தியமாகத் தென்படலாம். ஆனால் அதுவே உண்மை. பாருங்கள், அது உண்மை. ஏனெனில் காலவரம்பு என்பது அங்கு கிடையாது. அது நித்தியம். அங்கு நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது யாரை சந்திக்கிறேன் தெரியுமா? சகோதரி ஜார்ஜி ப்ரூஸ் அல்லவா அது? சகோதரி ஜார்ஜி, உங்களைக் கண்டு அதிக காலமாகிவிட்டது. நீங்கள் எப்பொழுதும் போலவே காணப்படுகின்றீர்கள். ஒருக்கால் அவர்கள் ஒரு கோடி வயதானவர்களாயிருக்கலாம். ஆனாலும் அவர்கள் என்றும் போல் யொவனமாகக் காணப்படுகின்றார்கள். அவர்கள் ஏதாவதொன்றின் முதுகை தடவிக் கொண்டிருப்பார்கள். அது என்னவென்று பார்த்தால், சிறுத்தையாக அல்லது சிங்கமாக இருக்கும். நான், ''சிறுத்தையே, இன்று காலை எப்படியிருக்கிறாய்?'' என்று கேட்க, அது, ''மியாவ்“ என்று பூனைக் குட்டியைப் போல் பதிலுரைக்கும். அந்த சகோதரி, “ஓ, நான் பெரிய பூக்கள் வளர்ந்துள்ள பூங்காவில் சில சகோதரர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் அந்த பூக்களைப் பார்த்துக் கொண்டே ஐந்நூறு ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டோம்” என்பார்கள். கேட்பதற்கு அது பைத்தியமாகத் தோன்றும், ஆனால் அது உண்மை. அது முற்றிலும் உண்மை. தேவன் அவ்வாறே அதை நிர்ணயித்துள்ளார். 47சகோதரி ஜார்ஜியா, கர்த்தர் உங்கள் இருதயத்தை ஆசிர்வதிப்பாராக. அங்கு எவ்வித தீங்கும் நேரிடாது. சாயங்கால நேரத்தில் நாம் மலையின் உச்சியில் சென்று, ''ஓ, பிதாவாகிய தேவனே, ஒரு சமயம் நான் பாவத்தில் விழுந்து கிடந்தேன். நான் பாவம் என்னும் உளையான சேற்றில் மூழ்கியிருந்தேன். பிதாவாகிய தேவனே, என்னை நீர் இரட்சித்தீர்'' என்போம். அதை வெளிப்படையாக கூற முயன்றவர் பைத்தியம் பிடித்தவர்களாக ஆகியிருக்கின்றனர். “ஓ, தேவ அன்பே” என்னும் அப்பாடலின் கடைசி சரணத்தை எழுதிய அந்த மனிதன், பைத்தியக்காரர் விடுதியிலிருந்து அதை எழுதினான். தேவனுடைய அன்பை அவன் வெளிப்படையாய் கூற முயன்றான் - அவர் எவ்வாறு பாவிகளை இரட்சிக்க தம்மை தாழ்த்தினார் என்றும், உன்னையும் என்னையும் இரட்சிக்க அவர் அன்பு எவ்வாறு இறங்கி வந்ததென்றும். வழிபாட்டைக் குறித்து பேசினால் தேவதூதர்களுக்கு அதைக் குறித்து அதிகம் தெரியாது. ஒரு தேவதூதனுக்கு, அங்கு நின்று கொண்டு, தன் செட்டைகளை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அசைத்து ''அல்லேலூயா, அல்லேலூயா'' என்று துதிக்க மாத்திரமே தெரியும். ஆனால் ஓ, இரக்கம், நான் காணாமற் போனேன். மீண்டும் கண்டெடுக்கப்பட்டேன்; நான் மரித்தேன், ஆனால் மீண்டும் உயிரடைந்தேன் என்று அறியும் போது ஓ தேவனே, நான் பாவியாய், களிமண்ணாய், குப்பையில் கிடைந்தேன்! 48வாழ்க்கை இதை தான் மேலானதாக உங்களுக்கு தரமுடியும். நீங்கள் எப்பொழுதாவது கால்கேட் குப்பை மேட்டுக்கு சென்றதுண்டா? இது வரை நான் சென்றுள்ள இடங்களில் மிகுந்த துர்நாற்றமுள்ள இடம் அதுவே. அங்கு எழும்பும் புகையை நீங்கள் முகரும் போது, ஆமணக்கு எண்ணெய் குடித்தது போல் உங்கள் வயிற்றை குமட்டும். உங்களை அது மிகவும் கஷ்டப்படுத்தும். அங்கு எலிகள் உங்கள் மேல் ஓடி, உங்களையும் தின்ன முயலும். அதுதான் வாழ்க்கை தரக்கூடிய மேலான ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாரோ ஒருவர் உங்களை அணுகி, அங்கிருந்து தூக்கியெடுக்கிறார். நீங்கள் மிகவும் வயோதிபராகி சுயமாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. அப்பொழுது ஒருவர் உங்களை அங்கிருந்து தூக்கியெடுத்து, பதினொட்டு வயது வாலிபனாக மாற்றி, திடகாத்திரமுள்ளவனாக்கி, மலையின் உச்சியில் நிறுத்தி, புதிய காற்றை சுவாசிக்கும்படி செய்து, குளிர்ந்த நீரை பருகத் தந்தால், மறுபடியும் அந்த குப்பை மேட்டுக்குச் செல்ல உங்களுக்கு மனமிருக்குமா? இல்லை, சகோதரனே, இல்லவே இல்லை. மறுபடியும் அந்த குப்பை மேட்டுக்குச் செல்ல உங்களுக்கு மனமிராது. 49நண்பனே, நான் மறுரூபமடைந்தது, அல்லது தரிசனம் கண்டது எனக்கு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. நான் அதை 'தரிசனம்' என்று கூறும் காரணம் என்னவெனில், நான் 'மறுரூபமடைதல்' (translation) என்று அதைக் கூறுவேனானால், அது யாரையாகிலும் புண்படுத்தும் என்று அஞ்சுகிறேன். ஆனால் உண்மையில் அது மறுரூபமாகுதல் தான். அங்கு தான் தேவன்... குமாரரையும் குமாரத்திகளையும் அவரிடம் கொண்டு வர தேவன் அதை தான் செய்தார். அவர்கள் எப்படி... இதற்கு தகுதியுள்ளவர்களாவதற்கு ஜனங்கள் என்ன செய்தனர்? அவர்களால் எப்படி அவ்வாறு செய்ய முடிந்தது? ஆதியில் தேவன், ஒரு தேவதூதனையும் சிருஷ்டிக்கும் முன்பே... அவர் முடிவற்றவர் (Infinite) என்று எத்தனை பேருக்குத் தெரியும்? திரித்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள சகோதரரே, உங்களைப் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் தேவனுடைய நல்வார்த்தையின் நாமத்தின் பேரில், நீங்கள் எவ்வாறு இயேசுவை தேவனிலிருந்து தனிப்பட்ட ஆளாகப் பிரிக்க முடிகின்றது? இங்குள்ள ஒரு நபரை மீட்க தேவன் வேறொருவரை அனுப்பி அவரைச் சாகச் செய்தால், அவர் அநீதியுள்ளவராயிருப்பாரே! தேவன் அதை செய்யக் கூடிய ஒரே வழி, அவரே அந்த நபரின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதாம். மரணத்தின் கஸ்திகளை அனுபவித்து, நம்மிலிருந்து மரணத்தின் கூரை (string) அகற்றி, அவருடைய சொந்த மரணத்தினாலே நாம் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தேவன் மாமிசமானார். அதனால் தான் அவர் அவ்வாறே ஆராதிக்கப்படுவார். இயேசு ஒரு மனிதன், நிச்சயமாக அவர் ஒரு மனிதன். ம-னி-த-ன். அவர் கன்னி மரியாளின் மூலம் பிறந்தார். ஆனால் அவருக்குள் இருந்த அளவில்லாத ஆவி தேவனாம். தேவத்துவத்தின் பரிபூரணம் அவருக்குள் சரீரப் பிரகாரமாய் வாசமாயிருந்தது. அவர் யேகோவா-யீரே, யோகோவா ராஃபா, யேகோவா மனாசேஸ். அவர் யேகோவா; நமது கேடகம், நமக்கு சுகமளிப்பவர். அவர் அல்பாவும், ஒமேகாவும், முந்தினவரும் பிந்தினவரும். ஆதியும் அந்தமுமானவர்; இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர்; தாவீதின் வேறும் சந்ததியுமானவர், விடிவெள்ளி நட்சத்திரம், அவர் எல்லாவற்றிற்கும் எல்லாமானவர். அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப் பிரகாரமாக வாசமாயிருந்தது. 50மரணத்திற்கு ஒரு கூர் இருந்தது. அதைக் கொண்டு அது மனிதர்களைக் கொட்டி வந்தது. பிசாசு, “ஆ, நீ எனக்கு செவி கொடுத்ததினால் உன்னைப் பிடித்துக் கொண்டேன். உன்னைக் கொட்டி கல்லறையில் வைத்துவிடுவேன். அந்த ஆட்டின் இரத்தத்தினால் எவ்வித உபயோகமுமில்லை. அது ஒரு மிருகத்தின் இரத்தம் மாத்திரமே'' என்று கூறி வந்தான். ஆனால் தேவனோ தமது ஞானத்தினால், உலகத் தோற்றத்துக்கு முன்பு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் தோன்றுவார் என்று அறிந்திருந்தார். ஆம், ஐயா. அந்த காலம் நிறைவேறுமளவும் அவர் காத்திருந்தார். ஒரு நாள் ஆட்டுக்குட்டியானவராகிய இந்த மனிதன் தோன்றின போது, சாத்தான் கூட ஏமாந்து போனான் அவரை அவன் உற்று நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இன்னின்னதைச் செய்யும். நீர் தேவனுடைய குமாரனேயானால், ஒரு அற்புதத்தை செய்யும். நீர் செய்வதை நான் காணட்டும். ஊ, ஊ, ஒரு கந்தைத் துணியை உமது முகத்தில் கட்டி உம்மைக் குட்டுவோம் நீர் தீர்க்கதரிசியானால் உம்மை அடித்தது யாரென்று சொல்லும். நீர்தான் அவரென்று எனக்கு நம்பிக்கையில்லை. அதுஉண்மையானால் நேரடியாக எங்களிடம் கூறிவிடும் என்று இப்படியெல்லாம் அவன் பேசினான். ''ஓ, நீர் யாரென்று எங்களுக்குத் தெரியப்படுத்தும்'', அவரோ தமது வாயைத்திறவாமலிருந்தார். 51அவர் தமது சீஷர்களிடம், ''என் பிதாவினிடம் நான் வேண்டிக் கொள்வேன். அப்பொழுது பன்னிரண்டு லேகியோன்களுக்கும் அதிகமான தூதர்களை அவர் அனுப்புவார்'' என்றார். பிலாத்து அதை கேட்கவில்லை, உங்களுக்கு தெரியுமா? “தேவன் அந்த விண்ணப்பத்திற்கு செவி கொடுக்கவில்லை, பார்த்தீர்களா? அவர் தேவனுடைய குமாரனாயிருந்தால், அதற்கு செவிகொடுத்திருப்பாரே! ஆகவே, அது அவரல்ல அவருடைய சரீரத்திலிருந்து இரத்தம் ஒழுகுவதைப் பாருங்கள். ஏய், போர் வீரர்களாகிய உங்களில் சிலர் அவருடைய முகத்தில் துப்புங்கள்''. அவர் மேல் துப்பி, அவரை பரியாசம் செய்து, அவருடைய தாடியைப் பியத்தார்கள். ”ஓ, அல்ல, அவரல்ல. என் கொடுக்கை உம்மில் பதியப் பண்ணுவேன். அவரை அங்கு கொன்று போடுவேன். நீர் அகப்பட்டுக் கொண்டீர்.'' அவர், ''ஏலி, ஏலி! என் தேவனே!, என் தேவனே!'' என்று கூக்குரலிட்ட போது, அவர் ஒரு மனிதன். ஏன் என்னைக் கைவிட்டீர்?“ கெத்சமனே தோட்டத்தில் அபிஷேகம் அவரை விட்டு சென்றது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு பாவியாக மரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் பாவியாக மரித்தாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பாவங்களாலல்ல, உன்னுடைய பாவங்களையும் என்னுடைய பாவங்களையும் அவர் சுமந்ததனால். அங்கு தான் அந்த அன்பு பிரதிபலித்தது - அவர் எவ்வாறு என் பாவத்தை ஏற்றுக் கொண்டு சுமந்தார் என்பதில் ஓ, அல்லேலூயா! அவர் என் பாவங்களை ஏற்றுக் கொண்டு சுமந்தார். 52அங்கே அவர் வாயைத் திறக்கவில்லை. ''ஓ, இவன் ஒரு சாதாரண மனிதன். இவன் கன்னியின் மூலம் பிறக்கவில்லை. நான் என் கொடுக்கை அதனுள் பதியச் செய்துவிட்டேன்.'' அவன் அங்கு வந்து, தன் கொடுக்கை அவருக்குள் பதித்தான். ஆனால் அது தவறான நேரம், அன்றே அவனுடைய கொடுக்கை அவன் பறி கொடுத்துவிட்டான். அன்று முதல் அவனால் கொட்ட முடியவில்லை. அவனுடைய கொடுக்கை அவன் அங்கே விட்டுவிட்டான். அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். ''மரித்தேன், ஆனாலும், இதோ, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன்'' (வெளி. 1:18). ஆம், ஐயா! அவர் யாரென்பதை பிசாசு காணத் தவறினான். ''நான் பிழைக்கிற படியினால் நீங்களும் பிழைப்பீர்கள்'' (யோவான். 14:19). 53அவர் உயிர்த்தெழுந்து அநேகருக்கு தம்மை உயிருள்ளவராக காண்பித்து மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு யாரோ ஒருவன், ''அவன் ஒரு ஆவி (Spook). அந்த மனிதனைக் குறித்து ஏதோ ஆவித் தன்மை காணப்படுகின்றது. நீங்கள் அவரைக் கண்டதாக கூறுகின்றீர்களே, அது வெறும் தரிசனமாகத்தான் இருக்கும்'' என்றான். “இல்லை, அவர் உண்மையான இயேசு”. தோமா, ''அவர் கரங்களிலுள்ள காயங்களில் என் கைகளை போட்டாலொழிய நான் விசுவாசிக்க மாட்டேன்'' என்றான். அவர் மறுபடியும் தோன்றி, “இதோ நான் இங்கிருக்கிறேன்'' என்றார். ''உங்களிடம் அப்பமும் மீனும் இருக்கின்றதா? எனக்கு ஒரு சான்ட்விச் (sandwich) கொண்டு வாருங்கள்'' என்றார். அவர்கள் ஒரு சான்ட்விச்சை அவருக்குக் கொடுத்தனர். அவர் அங்கு நின்று கொண்டு அதை புசித்தார். அவர், ''ஒரு ஆவி இப்படி புசிக்குமா? எனக்கு இருப்பது போல் ஒரு ஆவிக்கு மாம்சமும் எலும்புகளும் இருக்குமா?” என்று கேட்டார். பாருங்கள்? அவர், “நானே அவர், அது நான் தான்'' என்றார். 54பவுல், ''நாம் எப்படிப்பட்ட சரீரத்தைப் பெற்றுக் கொள்வோம் என்று இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவருடைய சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தைப் பெற்று கொள்வோமென்று அறிந்திருக்கிறோம்'' என்றான். அவர் தியாஃபனி சரீரத்தை (theophany body) பெற்றுக் கொண்டாரா? ஆம், ஐயா! அவர் மரித்த போது பாதாளத்திற்கு சென்று காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்று வேதம் கூறுகின்றது (1பேதுரு. 3:19). அவர் எப்படி அங்கு சென்றார்? எப்படி அவர் பிரசங்கித்தார்? அவருக்கு உணர்ச்சி என்னும் புலன் இருந்தது, கேட்குதல் என்னும் புலன் இருந்தது. பேசுதல் என்னும் புலன் இருந்தது, அன்றிரவு நான் மகிமைப்பட்டவர்களைக் கண்டேன், அவர்களுக்கிருந்த அதே போன்ற சரீரத்தில் அவர் பிரசங்கித்தார் நோவாவின் காலத்தில் தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த போது கீழ்ப்படியாமற் போன காவலிலுள்ள அந்த ஆவிகளுக்கு அவர் பிரசங்கித்தார் (Iபேதுரு. 3:19,20). எனவே அவர் உயிரோடேழுந்த போது, அந்த சரீரம் அழிவைக் காண முடியவில்லை. ஏனெனில் தீர்க்கதரிசியாகிய தாவீது அதை ஏற்கனவே கண்டு, ''என் மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும் என் ஆத்துமாவை பாதாளத்தில் வீடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்'' (சங். 16:9,10) என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அழிவு உண்டாகும் எழுபத்திரண்டு மணி நேரத்திற்கு முன்பே அந்த தியாஃபனி சரீரம் நோவாவின் காலத்தில் தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்து, கீழ்படியாமற்போன காவலிலுள்ள அந்த ஆவிகளுக்குப் பிரசங்கித்து, மறுபடியும் உயிரோடெழுந்து, அழிவுள்ளது அழியாமையைத் தரித்துக் கொண்டது. அவர் அங்கு நின்று கொண்டு புசித்து, அவர் ஒரு மனிதன் என்பதை வெளிப்படுத்தினார். அல்லேலுயா! 55சகோ. எவன்ஸ், அப்படித்தான் அவரை நாம் காண்போம். அப்பொழுது அவர் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் அல்லேலூயா! அப்பொழுது நாம் மேலும் கீழும் பிரயாணம் செய்வோம். உங்களுடன் நான் மலைகளுக்குப் பயணம் செய்து, லட்சக்கணக்கான ஆண்டுகள் கழிப்பேன். அது ஒரு சில நாட்கள் போல், ஒரு சில நிமிடங்கள் போல் தென்படும். நாம் அங்கு சென்று அமர்ந்திருப்போம். புசிக்கும் தருணம் வரும்போது, நான் சகோதரி உட்டை சந்தித்து, ''சகோதரி உட், எங்கு சென்றிருந்தீர்கள். பதினைந்து நிமிடங்களாக உங்களைக் காணவில்லையே“ என்று கேட்டால், ''ஓ, இரண்டாயிரம் ஆண்டுகளாக, சகோ. பிரன்ஹாமே'' என்று அவர்கள் விடையளிப்பார்கள். “ஓ, அப்படியா? எப்படியிருக்கிறீர்கள்?'' அங்கு நலமாயிராமல் வேறெதாகவும் இருக்க முடியாது. “என் அன்பார்ந்த சகோதரரே, இங்கு எல்லாரும் வாருங்கள். இங்கு உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். இங்கு நீரூற்று உள்ளது. நீங்கள் இதுவரை பானம் பண்ணினதிலே, இது மிகவும் நேர்த்தியான தண்ணீர். நாம் குளிர்ந்த நீரைப் பருகுவோம். நான் அங்கு சென்று ஒரு பெரிய திராட்சை குலையைப் பறித்துக் கொண்டு வருகிறேன். நாமெல்லோரும் அமர்ந்து அதை தின்போம்'' அற்புதமாயிருக்குமல்லவா? அப்படித்தான் அங்கு இருக்கும். 56நாம் எவ்வாறு அதைப் பெற்றுக் கொண்டோம்? நாம் எவ்வாறு அதை அறிந்து கொண்டோம்? உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் அதை முன் குறித்துவிட்டார். யாரை? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருப்பவர்களை. ''தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே. பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின. நம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக (அவர் சொல்லியுள்ள படி நாம் அவரைப் புகழ வேண்டும். தேவனே, உம்மைப் புகழ விரும்புகிறோம்) தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப்புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய (forgiveness of sins) மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.'' 57இப்பொழுது நான், 'புத்திரசுவிகாரம்' என்னும் பொருளுக்கு மீண்டும் செல்ல வேண்டும். ஆனால் சிறிது நேரம் பாவங்கள் (Sins) என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். பாவங்கள் அதை கவனித்தீர்களா? பாவி ஒருவன் பாவம் செய்வதனால் தேவன் அவனை குற்றப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் பாவியாக இருப்பதால் மாத்திரமே அப்படி செய்கிறான். ஒரு பாவி சுருட்டு புகைத்தால் அதற்காக அவர் அவனைக் குற்றப்படுத்துவதில்லை எப்படியாயினும் அவன் ஒரு பாவியே. பாருங்கள்? பாருங்கள்? ஒரு பாவியிடம் பாவங்கள் என்பது கிடையாது. அவன் பாவியே. ஆனால் கிறிஸ்தவனாகிய உன்னிடம் பாவம் உண்டு கவனியுங்கள், பவுல் இதை சபைக்குக் கூறுகிறான், சபை சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. பாருங்கள்? பாவமன்னிப்பு... பாவங்கள் மன்னிக்கப்படுதல் (forgiveness of sins). நாம் பாவம் செய்கிறோம். ஆனால் ஒரு பாவியோ எப்பொழுதும் பாவியே, தேவன் அவனை மன்னிப்பதில்லை. 58''அவன் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டானே! என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று நீங்கள் கேட்கலாம். அது என்னுடைய வேலையல்ல. நான் ஒரு சீர்திருத்தவாதியல்ல. நான் ஒரு பிரசங்கி , நாட்டின் சட்டங்கள் அதைப் பார்த்துக் கொள்ளும். அவர்கள் தான் சீர்திருத்தம் செய்வார்கள். ''அவன் விபச்சாரம் செய்தானே!'' என்று நீங்கள் கூறலாம். அது அவனுக்கும் சட்டங்களுக்கும் இடையேயுள்ள விஷயம். நான் சீர்திருத்தவாதியல்ல நான் மக்களை சீர்படுத்துபவன் அல்ல. நான் அவர்களை மனம் மாறச் செய்பவன். நான் ஒரு பிரசங்கி. அவனைத் தேவனிடம் கொண்டு வருவதே என் பணி. அவன் பாவம் செய்தால், அது அவனுடைய பொறுப்பு. தேவன் அவனை உயர்ந்த மட்டத்தில் குற்றப்படுத்துகிறார். தொடக்கத்திலேயே அவன் குற்றஞ்சாட்டப்பட்டவன். அவன் முதல் படியைக் கூட அடையவில்லை. தொடக்கத்திலேயே அவன் பாவி. அவனிடம் பாவங்கள் இல்லை, அவன் ஒரு பாவி. 59நீங்கள், “இவ்வளவு பாகம் மாத்திரம் இரவு. இவ்வளவு பாகம் இரவல்ல'' என்று இரவைப் பார்த்துக் கூற முடியாது. அது முழுவதுமே இரவு தான். அவன் பாவியென்று தேவன் கூறியுள்ளார். அவ்வளவுதான். அவன் இன்னின்னவைகளைச் செய்துள்ளான். எனவே இவ்வளவு பாகம் இரவு, ”இவ்வளவு பாகம் வெளிச்சமுள்ள இரவு'' என்று கூறலாம். எனக்குத் தெரியும். எல்லாமே இரவு. அவ்வளவு தான். பாருங்கள்? அது போன்று, “இவ்வளவு பாகம்தான் வெளிச்சம் என்று என்னால் கூற முடியாது. எல்லாமே வெளிச்சம் தான்”. அது எவ்வளவு பாகம் வெளிச்சம் என்று கூறமுடியாது. பாருங்கள்? ஆனால் அதில் கறுத்த புள்ளிகள் காணப்படுமானால், அப்பொழுது அதில் இருள் உள்ளது. 60எனவே பாவங்கள், நமது பாவங்கள் எதனால் மன்னிக்கப்படுகின்றன? அவருடைய (என்ன?) விலையேறப்பெற்ற இரத்தத்தால். ...அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே... அதை நாம் எப்படி மறந்துவிட முடியும்? நாம் தகுதியுள்ளவர்கள் என்னும் காரணத்தால், நமது பாவங்கள் மன்னிக்கப்பட நாம் ஏதாவது செய்தோமா என்ன? அவருடைய எது நமக்கு மீட்பைத் தந்தது? ...கிருபை; ஓ, என்னே ஆண்டவரே, என் கரங்களில் நான் ஒன்றையும் கொண்டு வரவில்லை. இதற்கு தகுதியாவதற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நான் செய்யக் கூடியது ஒன்றுமேயில்லை, பாருங்கள்? அவர் என்னை முன்குறித்தார், அவர் என்னை அழைத்தார். அவர் என்னைத் தெரிந்து கொண்டார். நான் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை, அவர் என்னைத் தெரிந்து கொண்டார். அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். “நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்” என்று இயேசு கூறினார். (யோவான். 15:16). மேலும் அவர், ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான் (யோவான். 6:44). பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் (யோவான். 6:37). வேதவாக்கியம் நிறைவேற்றத் தக்கதாக, “கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப் போகவில்லை (யோவான். 17:12)'' என்றார். பார்த்தீர்களா? ”பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'' என்றார் அவர். 61ஓ, நான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். இல்லையா? இன்னும் நான் இதை முடிக்கவில்லை. சரியாகக் கூறினால் நான் இன்னும் தொடங்கக் கூடவில்லை. நான் துரிதமாக பேசட்டும். இப்பொழுதே நான் இந்த பொருளுக்கு வர வேண்டும் இன்னும் சிறிது நேரத்தில் “புத்திரசுவிகாரம்'' என்னும் பொருளுக்கு நான் வரவேண்டும். சிறிது நேரம் தொடர்ந்து பேசினால் என்னை மன்னிப்பீர்களா? இதற்கு நாம் வருவோம் ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள சிலர் இன்றிரவு மாத்திரமே இங்கிருப்பார்கள் கர்த்தர் அவர்களை ஆசிர்வதிப்பாராக! ஜார்ஜியா, டெக்ஸாஸ் என்னும் இடங்களிலிருந்தும், மற்ற இடங்களிலிருந்தும் கேட்டுக் கொண்டிருக்கும் சகோதரர்களே. இந்த 5-ம் வசனத்தை உற்றுக் கேளுங்கள்... ”சுவிகார புத்திரராகும்படிக்கு முன் குறித்திருக்கிறார்“. 62(Having predestinated unto adoption) ''படிக்கு'' (unto) என்றால் என்ன அர்த்தம்? நாம் வருங்காலத்தில் அடையப் போகும் ஒன்றை அது காண்பிக்கிறது. ''நான் நீரூற்றண்டைக்கு செல்கிறேன்'' (unto the fountain) “நான் நாற்காலியண்டைக்கு செல்கிறேன்” (unto the chair). ஹ்யூம்ஸ், உங்களுக்குப் புரிகின்றதா? தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே (His own pleasure of His will), “நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படிக்கு முன் குறித்திருக்கிறார்.'' எவ்வளவு தயவு? யாருடைய தயவு?அவருடைய சொந்த தயுவு தம்முடைய தயவுள்ள சித்தம். 63''புத்திரசுவிகாரம்“ என்றால் என்ன? அதற்கு இப்பொழுது வருவோம். இதை முடிக்க நேரம் இருக்குமோ இருக்காதோ. எனக்குத் தெரியாது. ஆயினும் அதை நாம் பார்க்கலாம். அதன் பேரில் உங்களுக்கு ஏதாகிலும் கேள்விகள் இருக்குமானால், இச்செய்தியை நான் முடிக்கும் முன்பு, எப்பொழுதாகிலும் பின்னர் நீங்கள் கேட்கலாம். கவனியுங்கள், உங்களுடைய புத்திர சுவிகாரம் உங்கள் பிறப்பல்ல. உங்களுடைய புத்திர சுவிகாரம் உங்களை உங்கள் ஸ்தானத்தில் பொருத்துகின்றது. நாம் மறுபடியும் பிறக்கும் போது, யோவான்: 1:17 என்று நினைக்கிறேன். தேவனுடைய ஆவியால் நாம் பிறக்கும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம் ஆனால் நாம் முன் குறிக்கப்பட்டவர்கள். இந்த கடைசி கால தேவனுடைய பிள்ளைகள் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்று இதை விளக்கிக் கூற முயல்கிறேன். நாம் சுவிகார புத்திரராகும்படிக்கு முன் குறிக்கப்பட்டிருக்கிறோம். இது தான் பெந்தேகோஸ்தே மக்களை புண்படுத்துகின்றது. அவர்கள், ''நான் மறுபடியும் பிறந்துவிட்டேன்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன்'' என்கின்றனர். மிகவும் நல்லது நீ தேவனுடைய பிள்ளை அது சரி, ஆனால் அதைக் குறித்து நான் இப்பொழுது பேசவில்லை. பாருங்கள், நீங்கள் சுவிகார புத்திரராகும்படிக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள். புத்திர சுவிகாரம். அது ஒரு குமாரனை அவனுடைய ஸ்தானத்தில் வைத்தல். நான் ஒலிபெருக்கிக்கு மிக அருகாமையில் வந்துவிட்டேன். நான் அடிக்கடி அதன் அருகாமையில் வந்து விடுவதால், பின்னால் கேட்க முடியவில்லை என்று பெக்கி என்னிடம் கூறினாள். 64ஒரு பிள்ளை. பழைய ஏற்பாட்டில் ஒரு குமாரனை சுவிகார புத்திரனாக ஏற்றுக் கொள்வதற்கு வேண்டிய விதிமுறைகளை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? நீங்கள் அதை படித்திருப்பீர்கள். ஒரு மகன் பிறக்கிறான். அதைக் குறித்து ஒரு செய்தியில் நான் கூறியுள்ளேன் ஜீன், அது என்ன செய்தி என்று ஞாபகமுள்ளதா? அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது என்ன? ஓ, எனக்கு ஞாபகம் வந்து விட்டது, ''அவருக்குச் செவி கொடுங்கள்'' (“Hear ye Him”) என்னும் செய்தி - பிள்ளைகளைச் சுவிகாரபுத்திரராக ஏற்றுக் கொள்ளுதல். பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு மகன் பெற்றோருக்குப் பிறக்கும் போது, அவன் அந்த குடும்பத்தில் பிறந்த குமாரனாகிறான். அவன் எல்லாவற்றிலும் சுதந்தரவாளியாகின்றான். இந்த குமாரன் உபாத்தியர்களால் வளர்க்கப்படுகின்றான். கலாத்தியர் தம் அதிகாரம், 17 முதல் 25 வசனங்கள். சரி. அவன் உபாத்தியர்களால் வளர்க்கப்படுகின்றான். உதாரணமாக, எனக்கு ஒரு மகன் பிறந்தான் என்று வைத்துக் கொள்வோம். நான் அவனுக்குத் தந்தை. 65அதனால் தான் ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில், ''என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு“ என்று கூறப்பட்டுள்ளது விசித்திரமானது என்று அநேகர் எண்ணினர் - ஒரு வீடு, அநேக வாசஸ்தலங்கள், ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில் 'வீடு' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை 'ராஜ்யம்' (domain) என்று அர்த்தங்கொள்ளும். ''என் பிதாவின் ராஜ்யத்தில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு'' - ஒரு வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் என்றல்ல, அவர் இந்த ராஜ்யத்திற்கு பிதா என்று அழைக்கப்பட்டார். வேதப்பூர்வமாக அப்படித்தான் உள்ளது. தந்தைக்கு ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள பண்ணை ஒன்று இருந்த போது, அங்கு ஒரு கூட்டம் ஜனங்கள் வசித்து வந்தனர். அங்கு ஆடுகளை மேய்க்க சிலரையும், மாடுகளை மேய்க்க சிலரையும், மேல் பண்ணையை அடைய 100 மைல் தூரம் சென்று அதை கண்காணிக்க சிலரையும், கோவேறு கழுதைகளை மேய்க்க சிலரையும் அவர் அமர்த்தியிருந்தார். வெவ்வேறு பணிபுரிய அவருக்கு ஒரு பெரிய ராஜ்யம் இருந்தது. அவர் தன் கழுதையின் மேலேறி, அவர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர்; ஆட்டுமயிர் கத்தரித்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனர் என்பதைக் காணச் சென்றார். நான் ஒலிபெருக்கியிலிருந்து அகன்று சென்றால் உங்களுக்கு கேட்கவில்லை அல்லவா? இங்கு நின்று கொண்டே பிரசங்கம் செய்ய முயல்கிறேன். இப்பொழுது நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா? சரி, கவனியுங்கள். 66அவர் கழுதையின் மேல் சவாரி செய்து, அவருடைய ராஜ்யத்தைப் பேணிப் பாதுகாத்தார். இப்பொழுது அவர் விரும்பு கிறார்... அவருடைய குமாரன் அவருடைய உடமைகள் அனைத்திற்கும் சுதந்தரவாளியாகப் போகிறான். அவன் சுதந்தரவாளி. நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிறக்கும் போது, பரலோகத்தின் சுதந்தரவாளியாகிவிடுகிறோம், இயேசுவுடன், உடன் சுதந்தரவாளியாகிவிடுகிறோம். ஏனெனில் அவர் நமது ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். நாம் அவராகும் பொருட்டு (அவருடைய நீதியாகும் பொருட்டு), அவர் நாமானார் (பாவமானார்). பாருங்கள்? நான் அவராகும் பொருட்டு அவர் நானானார். பாருங்கள், அவருடன் உடன் சுதந்தரவாளிகள். சரி, நீங்கள் ஒவ்வொருவரும் அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 67இதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இந்நிலைக்கு வருவீர்களென்று தேவன் தமது முன்னறிவின்படி முன்குறித்தார். நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டீர்களா? உங்கள் கைகளையுயர்த்துங்கள். தேவன் தமது முன்னறிவின்படி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமென்று முன்குறித்தார். இன்று கிறிஸ்தவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் எது? உங்களுக்குத் தெரிந்தால் கைகளையுயர்த்துங்கள். ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும். உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கிற தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது (அப். 2:39). கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும், உங்கள் குமாரர் மேலும், குமாரத்திகள் மேலும், என் ஆவியை ஊற்றுவேன்“ (அப். 2:17). மேலும் ஏசாயா 28:10-ல் ”கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். நலமானதைப் பற்றிக்கொள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே இளைப்பாறுதல் அவர்கள் பிரவேசிக்க வேண்டுமென்று நான் கூறின இளைப்பாறுதலின் தேசம். அவர்களோடே சொன்னாலும் கேட்கமாட்டோம் என்று சொல்லி, தங்கள் தலைகளைத் துலுக்கி கேட்காமல் நடந்து சென்றுவிட்டார்கள்“ பார்த்தீர்களா? அப்படியே. 68அது என்ன? எகிப்திலிருந்து புறப்பட்டு வனாந்தரத்தின் வழியாய் பிரயாணம் செய்து, அந்த தேசத்திலிருந்து கொண்டுவந்த திராட்சை பழங்களை ருசி பார்க்கும் அளவுக்கு அவ்வளவு அருகாமையில் வந்த அந்த இஸ்ரவேல் ஜனங்களைப் போல் இருக்கின்றனர், அவர்கள் எல்லை கோடு விசுவாசிகள். அவர்கள் ஒருக்காலும் கடந்து செல்லவே மாட்டார்கள். அவர்களால் கடந்து செல்ல முடியாது என்று இயேசு கூறியுள்ளார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்'' என்றனர். இயேசுவோ, “அப்படியிருந்தும் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார், அதுதான் அவர்களைப் பிரித்தது. அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தனர். அது உண்மை. ''நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” என்றார் அவர். (யோவான். 6:51). அது உண்மை. ஆம், ஐயா, அவரிடம் நித்திய ஜீவன் உண்டு. இதைப் புசிக்கிறவன்... “நான் ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவவிருட்சம்.'' 69பாருங்கள், இந்த ஜனங்கள் அவ்வளவு அருகாமையில் வருகின்றனர். நீங்கள் எபிரெயர் 6-ம் அதிகாரத்தைக் கவனிப்பீர்களானால்; நான் மறுபடியும் அதற்குச் செல்லவில்லை. ''இவர்கள் பங்குகொண்டு, மிக அருகாமையில் வந்து, பரம் ஈவை ருசி பார்த்தவர்கள்'' என்று எபிரெயர் 6 உரைக்கின்றது. அவர்கள் உட்கார்ந்திருந்து, அநேகர் சுகம் பெறுவதைக் கண்டனர். தேவனுடைய வல்லமை ஜனங்களை சுகமாக்குவதையும், அவர்களுடைய வாழ்க்கை முற்றிலும் மாறுவதையும் அவர்கள் கண்ட பிறகும், அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள மறுத்தனர். இல்லை, ஐயா, இல்லை, ஐயா. “இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதலுக்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். தங்களைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அவர்கள் அசுத்தமென்றெண்ணி...'' பரிசுத்தமாக்குதல் என்னும் போதகத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் சபையை நான் சேர்ந்தவன். அதுவரை நல்லதுதான். ஆனால் நீங்கள் செல்ல வேண்டிய தூரத்துக்குச் செல்லவில்லை. பாருங்கள்? ஆம், ஐயா. வனாந்தரம் இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தினது ஆம், உண்மையாக. அவர்களுக்கு வெண்கல சர்ப்பமும், வெண்கல பலிபீடமும் மற்றெல்லாமே இருந்தன பரிசுத்தமாக்கப்படுதல். ஆனால் இளைப்பாறுதலுக்கு அவர்கள் பாலஸ்தீனாவில் பிரவேசித்தனர். 70எபிரெயர் 4-ம் அதிகாரத்தைப் பாருங்கள். அங்கு வேறொரு இளைப்பாறுதலைக் குறித்து பவுல் சொல்லவில்லையா? (எபி. 4:9). தேவன் ஆறு நாட்களில் சிருஷ்டித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து, ஏழாம் நாளை அவர்களுக்கு ஓய்வு நாளாய் தந்தருளினார். வேறொரு இடத்தில் அவர் ஓய்வு நாளைக் குறிப்பிட்டு, “இன்றைக்கு தாவீதுக்குள்” என்றார். பின்பு அவர் வேறொரு இளைப்பாறுதலை அவர்களுக்கு அருளினார், ''வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்'' (மத். 11:28). இந்த இளைப்பாறுதலில் பிரவேசியுங்கள்! நாம், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்வுநாளில் ஓய்ந்தது போல், நாமும் நம் கிரியைகளை முடித்து ஓய்ந்திருக்கிறோம் (எபி. 4:10). நிச்சயமாக. அதுதான் உங்கள் ஓய்வுநாள், இளைப்பாறுதல். அதுதான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் உங்கள் உண்மையான இளைப்பாறுதல். பரிசுத்த ஆவியால் ஜனங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம். அப்படியிருக்க அவர்கள் ஏன் கல்வியறிவு கொண்ட போதகர்கள் பெண்கள் குட்டை கால்சட்டை அணியவும், தலைமயிரைக் கத்தரிக்கவும், உதட்டுசாயம் பூசவும், ஆண்கள் மது அருந்தி, சூதாடி, அருவருப்பான நகைச்சுவை துணுக்குகளைக் கூறவும் அனுமதிக்கின்றனர். இப்படி செய்கிறவர்கள் தங்களை சபையின் அங்கத்தினர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட போதகர்களை அவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் புறக்கணிக்கின்றனர். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறதல்லவா? (எபி. 4:12). ஆம், இருதயத்தின் நினைவுகளையும் கூட. 71நாம் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், நம்மிடத்தில் பிதாவின் அன்பில்லை (1யோவான் 2:15). ''அழைக்கப்பட்டவர்களோ அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்“, ”ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்'' (மத். 7:14). ''அந்த நாளில் அநேகர் என்னிடம் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுடன் கூட பந்தியிருப்பார்கள். ஆனால் ராஜ்யத்தின் புத்திரரோ தள்ளப்படுவார்கள்'' என்றார். இயேசு அநேகர் அந்நாளில் வந்து: ஆண்டவரே, உமது நாமத்தினால் இதை செய்யவில்லையா? நாங்கள் போதகம் பண்ணவில்லையா? நாங்கள் டாக்டர், சங்கை என்னும் பட்டங்களினால் அழைக்கப்படவில்லையா? என்பார்கள். அப்பொழுது இயேசு: நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்பார்'' (மத். 7:22-23). ''என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை''. 72அதுதான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசித்தல். அதற்குள் நாம் எப்படி பிரவேசிக்க முடியும்? சபையாகிய நாம் அதற்கென்று தேவனுடைய முன்னறிவினால் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நாம் எதற்காக முன் குறிக்கப்பட்டிருக்கிறோம்? அவருடைய மகிமைக்கும் கிருபைக்கும், வழிபாட்டிற்கும் புகழ்ச்சியாக நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். தந்தை ஆதியில் தனிமையில் வீற்றிருந்தார். அவரைச் சுற்றி அப்பொழுது ஒன்றுமேயில்லை. அவரை ஆராதிக்க ஏதாவதொன்றிருக்க வேண்டுமென்று அவர் எண்ணினார். எனவே உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் ஒரு சபையை முன்குறித்து, அவர்களின் பெயர்களை ஆட்டுகுட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதினார். அப்பொழுதே அவர்களும் உலகத்தோற்றதுக்கு முன்பே அடிக்கப்பட்டவர்களாய், அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக அவர்களை அவர் தோன்றச் செய்து, முடிவு காலத்தில் கிறிஸ்து இயேசு என்னும் ஒரு மனிதனில் அவர்களை ஒன்று சேர்க்க சித்தம் கொண்டார். வ்யூ! மகிமை! அதுதான்... சகோதரனே, சகோதரியே, அது உண்மை. அதனின்று விலகிச் செல்ல வேண்டாம். 73தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளுதலின் கிருபையினால் உன்னை அழைத்தார். அவருடைய தெரிந்து கொள்ளுதலின் கிருபையினால் உன்னை பரிசுத்தப்படுத்தினார். அவருடைய தெரிந்து கொளுதலின் கிருபையினாலும் வல்லமையினாலும் உன்னை பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்து, இளைப்பாறும் தேசத்தில் உன்னை வைத்தார். இந்த இளைப்பாறுதலில் பிரவேசித்தவர்கள், வழித்தவறி செல்வதிலிருந்து ஓய்ந்திருக்கின்றனர். தேவன் தமது கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல், அவர்களும் தங்களுடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருக்கின்றனர். அவர்கள் சொல்லி முடியாத சந்தோஷமுடையவர்களாய் களிகூர்ந்து, மகிமையால் நிறைந்திருக்கின்றனர். அவர்களுக்குள் ஜீவ விருட்சம் கனி கொடுக்கத் தொடங்குகிறது. அவர்கள் நீடிய பொறுமை, தயவு, நற்குணம், பொறுமை, விசுவாசம், சாந்தம் போன்றவைகளைப் பெற்றுள்ளனர். ஜீவ விருட்சம் அவர்களில் கனி கொடுக்கத் தொடங்குகிறது. ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கை கிறிஸ்து இயேசுவில் நங்கூரமிடப்பட்டுள்ளது. விசுவாசிகளை அற்புதங்களும் அடையாளங்களும் தொடர்ந்து, அதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உறுதிப்படுத்துகின்றார். ''விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'', அவர்கள் சென்று வியாதியஸ்தர்களை சுகப்படுத்துகின்றனர். பிசாசுகளைத் தூரத்துகின்றனர், நவமான பாஷைகளைப் பேசுகின்றனர். தரிசனங்களைக் காண்கின்றனர். அவர்கள் தேவனுடன் நடந்து செல்கின்றனர், தேவனுடன் பேசுகின்றனர். பிசாசு எதுவும் அவர்களை அசைக்க முடியாது. அவர்கள் உறுதியாய் நின்று, நித்திய ஜீவனை எதிர்நோக்கினவர்களாய், பின்னானவைகளை மறந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் பரம அழைப்பின் இலக்கை நோக்கி தொடருகிறவர்களாயிருக்கின்றனர். அதுதான், அதுதான், அதுதான் சபை. 74அவர்கள் எப்படி அங்கு அடைந்தனர்? நீங்கள். ''ஆண்டவரே, நான் சுருட்டு புகைத்தேன். நான் விழுந்து போனேன். பின்பு நான் யோசித்தேன்...'' என்று சொல்வதல்ல. ஓ, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. அது முன்குறித்தல். அவர் நம்மை அழைத்தார். அவரை நாம் பின்தொடரும் போது, ஆண்டவரே, “நாங்கள் இழந்த நிலையிலிருந்தோம். எங்களை இரட்சித்துக் கொள்ள எங்களுக்கு மனதில்லாதிருந்தது. சுபாவத்தில் நாங்கள் பன்றிகளைப் போல் இருந்தோம்'' என்று நாம் கூறுவோம். பன்றிகள் அடைக்கப்பட்டுள்ள பட்டிக்கு நீங்கள் சென்று, அங்குள்ள கிழப் பன்றி ஒன்றிடம், “ஓ, கிழவியே நான் கூறுவதைக் கேள். அசுத்தத்தை குடிப்பது தவறு” என்று கூறிப் பாருங்கள். அது, “ஒய்ங்க் - ஒய்ங்க்” என்று தான் சத்தமிடும். பாருங்கள்? உங்களை நீங்களே இரட்சித்துக் கொள்வதும் அதுபோன்று தான். அது முற்றிலும் உண்மை. 75நீங்கள், ''பெண்னே , இத்தகைய ஆபாசமான ஆடை அணியக் கூடாது. நீ ஒழுங்காக உடுக்க வேண்டும். நீ சீட்டு விளையாடக் கூடாது. நீ புகை பிடிக்கக் கூடாது. மிஸ்டர், நீ இதை செய்யக் கூடாது'' என்று கூறிப் பாருங்கள். உடனே அது, ''ஒய்ங்க் - ஒய்ங்க். நான் ஒய்ங்க் - ஒய்ங்க் சேர்ந்தவள்'' என்று சொல்லிவிடும். நான் “ஒய்ங்க். அவ்வளவு தான் அவர்களுக்குத் தெரியும். நான் உங்களைப் போலவே நல்லவன் தான், ஒய்ங்க் - ஒய்ங்க்” என்று கூறிவிடும். பாருங்கள், அவர்கள் பரிசுத்த ஆவியின் தலைமையை நிராகரித்துவிடுகின்றனர். ஏனெனில் நீ உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உன்னிடத்தில் பிதாவின் அன்பில்லை என்று வேதம் கூறுகின்றது. 76அவர்களை வித்தியாசமானவர்களாகச் செய்வது எது? நீங்கள் பரிசுத்த ஜாதி (1பேது. 2:9). நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு தேசத்தை விட்டு வேறொரு தேசத்திற்குள் பிரவேசித்தீர்கள். நீங்கள் எப்படி அதற்குள் பிரவேசித்தீர்கள். ஏனெனில் அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம். அது எத்தகைய வாக்குத்தத்தம் ''நான் கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்'' ஓரே ஆவியினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தேசத்திற்குள் சகோதரர்களே, சகோதரிகளே, அல்லேலூயா! அங்கே இருதய சுத்தம் இருக்கும். எந்த பொறாமையும், விரோதமும் எதுவும் அங்கு காணப்படுவதில்லை. சகோதரன் ஒருவன் வழிதவறி செல்ல நேரிட்டால், அவன் எத்தகைய தவறு செய்திருந்தாலும், அவனை நீங்கள் பின்தொடர்ந்து சென்று சரிசெய்ய முயல்வீர்கள். 77அண்மையில் இவ்வாறு வழிதவறி சென்ற ஒரு சகோதரனின் பின்னால் நான் சென்றேன். அதைக் கண்ட ஒரு வாலிபன், ''அந்த அயோக்கியன் போகட்டும் அவனை விட்டுவிடுங்கள்'' என்றான். நான் அவனிடம், அந்த ''சகோதரனின் பின்னால் என் இருதயம் சொல்லக் கூடாத ஒரு நிலையை நான் அடைந்திருப்பேனானால், நான் உடனடியாக தேவனுடைய சமூகத்தில் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அதன் அர்த்தம். ஏனெனில் நான் கிருபையிலிருந்து விழுந்துவிட்டேன் என்பதை அது காண்பிக்கிறது. அவனுடைய தேகத்தில் மூச்சுள்ளவரை அவன் பின்னால் சென்று, அவனை எங்காவது மறுபடியும் பிடிப்பேன்“ என்றேன். ஆம், ஐயா. நான் அவனைப் பிடித்து, அல்லேலூயா, மறுபடியும் கொண்டு வந்துவிட்டேன். ஆம், ஐயா. அவன் மறுபடியும் மந்தைக்குள் வந்து பாதுகாப்பாக இருக்கிறான். ஆம், ஐயா. இல்லையென்றால் அவன் நிச்சயம் வழிதவறி சென்றிருப்பான். 78சற்று முன்பு அந்த ஏழை ஸ்திரீஅங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறதை கண்டேன். அந்த ஷெரீப் என்னை அழைத்து, ''அவள் பைத்தியக்கார விடுதியில் இருக்க வேண்டியவள். அவளுக்கு மூளை கலங்கியுள்ளது. அவள் வன்முறையில் ஈடுபடுகின்றாள். நான் வரும் வரை ஓட்டலில் வைத்திருந்தனர்'' என்றார். நான், “பரவாயில்லை” என்றேன். அந்த ஷெரீப்பை என் சிறு வயது முதல் நான் நன்கு அறிவேன். அவர், ''உனக்கு உதவி வேண்டுமா?'' என்று கேட்டார். நான் “பரவாயில்லை'' என்றேன். அவர், ''நீ அவளுக்கு உதவி செய்ய முடியுமா?'' என்றார். நான், “என்னால் முடியாது. ஆனால் அவரால் முடியும். அவளை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்'' என்றேன். அவளை இங்கு கொண்டு வந்தனர். சற்று முன்பு அவள் சமாதானத்துடன் இங்கிருந்து சென்றாள். அது என்ன? அவளுக்காக நாம் ஜெபம் செய்தோம். ஆமென்! அவள் மிகவும்... அவர்கள் அவள் கணவனிடம், “மருத்துவரை நாங்கள் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டனர். அவர், ''மருத்துவர் அவளுக்கு ஒன்றும் செய்ய முடியாது“ என்று பதிலளித்தார். அவர் கூறியது உண்மை. ஏனெனில்அவளுக்குப் பைத்தியம் பிடித்திருந்தது. எந்த மருத்துவரும் அவளுக்கு ஒன்றும் செய்யமுடியாது. அவர், ''அங்கு செல்வதிலேயே எங்கள் நம்பிக்கையுள்ளது'' என்றார். அந்த ஷெரீப், ''பில்லி, அவள் எப்படி சுகமானாள் என்று எனக்குப் புரியவேயில்லை'' என்றார். நான், ''நீர் புரிந்து கொள்வீர் என்று நானும் எதிர்பார்க்கவில்லை“ என்றேன். 79ஓ, என்னே! எனக்கும் கூட அது புரியவில்லை. ஆனால் சகோதரனே, பரலோகத்தின் தேவன் ஒரு சமயம் ஒரு வழியை உண்டு பண்ணி, அவர் என்னைப் பின் தொடர்ந்தார், ஆமென்! நான் அவரைப் பின் தொடர்ந்ததால் அல்ல, அவர் என்னைப் பின் தொடர்ந்த காரணத்தால் தான். ஏனெனில் உலகத் தோற்றத்துக்கு முன்பே, அல்லேலூயா, அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்காக, நாம் அவருடையவர்களாயிருக்க வேண்டுமென்று தேவன் முன்குறித்தார். கவனியுங்கள்! அவர் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அவர் என்ன செய்திருக்கிறார்? அழைத்திருக்கிறார். அது உண்மையா? அவர் உங்களை அழைத்தாரா? ஆம், அவர் ஏன் உங்களை அழைத்தார்? ஏனெனில் அவர் உங்களை முன்னறிந்திருந்தார் அவர் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். அது சரியா? எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் (ரோமர். 8:29 30). ஆமென்! அப்படித்தான் வேதம் கூறுகின்றது. அவர் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார் - ஒவ்வொரு சந்ததியிலும் எவர்களை அழைத்தாரோ, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்திவிட்டார். என்ன? அந்த வேத வாக்கியத்தை இங்கு படிக்க விரும்புகிறேன். பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். ஓ, உங்களுக்கு புரிகின்றதா? மகிமைக்குப் புகழ்ச்சியாக! அவர் நித்திய காலமாய் அங்கு அமர்ந்து கொண்டிருக்க, அவருடைய பிள்ளைகள், “அப்பா, பிதாவே!'' என்று கூச்சலிடுவார்கள். தேவதூதர்கள் ஒன்றும் புரியாமல், “அவர்கள் என்ன சொல்கின்றனர்? அவர்கள் என்ன சொல்கின்றனர்?'' என்று கேட்பார்கள். 80கெட்ட குமாரன் கதையில் அது மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. என் குமாரனாகிய இவன் காணாமற் போனான் திரும்பவும் காணப்பட்டான். அவன் மரித்தான், திரும்பவும் உயிர் பெற்றான். கொழுத்தக் கன்றைக் கொண்டு வாருங்கள். சிறந்த அங்கியை அவனுக்கு உடுத்தி, அவன் விரலில் மோதிரத்தைப் போடுங்கள் நாமெல்லாரும் எனவே இரட்சிப்பின் திட்டத்தை கண்ட போது, விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள். 81''கால்வின் அப்படித்தான் விசுவாசித்தார்'' என்று நீங்கள் கூறலாம். எனக்கு கால்வின் பேரில் நம்பிக்கையில்லை. அவர் ஒரு கொலையாளி. இயேசுவின் நாமத்தினால் ஒருவர் ஞானஸ்நானம் கொடுத்தார் என்பதற்காக கால்வின் அவரை கொலை செய்தார். அவர் ஒரு அயோக்கியன். அவரே மனந்திரும்ப வேண்டியது அவசியமாயிருந்தது. ஆம். ஐயா. ஆனால் அவர் சொன்ன சில காரியங்கள் உண்மையாகும். ஆனால் அவருடைய செயலோ! அப்படிப்பட்ட ஒன்றிற்காக ஒரு மனிதனைக் கொலை செய்வது மிகவும் பயங்கரமான பாவமான செயலாகும். சரி. ...எங்களிடத்தில் பெருகப் பண்ணினார். 82ஓ, சற்று பொறுங்கள். நான் “புத்திரசுவிகாரம்” என்பதை முடிக்கவில்லை. முடித்துவிட்டேனா? அதிக தாமதமாகிவிட்டதா? கடிகாரத்தில் என்ன நேரம் என்று பார்க்கலாம். சரி. தொலைதூரத்திலிருந்து வந்துள்ள இவர்களுக்காக இன்னும் பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்வோம். கவனியுங்கள். கவனியுங்கள். 83புத்திரசுவிகாரம். ஏன் அது செய்யப்படுகிறது என்று இப்பொழுது நான் காண்பிக்க விரும்புகிறேன். தந்தை ஒருவருக்கு பெரிய ராஜ்யம் உள்ளது அவர் சவாரி செய்து சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகிறார். அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவர் அதிக மகிழ்ச்சி கொள்கிறார் (அது தான் தேவன்). தந்தை என்ன செய்வார் என்று உங்களுக்குத் தெரியும்? அவர் மிகச் சிறந்த உபாத்தியரைக் கண்டுபிடிக்கிறார். உபாத்தியர் என்பவர் யாரென்று உங்களுக்குத் தெரியும். அவர் பள்ளி ஆசிரியர். அவர் நாட்டிலேயே மிகச் சிறந்த பள்ளி ஆசிரியரைத் தேடிக் கண்டு பிடிக்கிறார். அவருடைய மகன் சிறந்தவனாக வர வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்கள் பிள்ளைகளும் அப்படி சிறந்தவர்களாக ஆக வேண்டுமென்று நீங்கள் விரும்புவதில்லையா? நிச்சயமாக சிறந்ததையே அவர்களுக்குத் தருகின்றீர்கள். ஆம், ஐயா. மாமிசப் பிரகாரமான மனிதனே அவ்வாறு எண்ணினால், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு என்ன தர வேண்டுமென்று நினைப்பார்? மிகச் சிறந்ததையே. 84அவருக்கு உத்தமமான ஒரு ஆசிரியர் தேவை. அவருடைய மகனிடம், ''நீ என்ன வேண்டுமானாலும் செய்'' என்று கூறிவிட்டு, அவனுடைய தந்தையிடம், ''உங்கள் மகன் மிகவும் நல்லவன், அவன் நன்றாக முன்னேறுகிறான்“ என்று கூறும் மனிதன் அவருக்குத் தேவையில்லை. இல்லவே இல்லை. அப்படிப்பட்ட ஒருவரை அவர் உடனே வேலை நீக்கம் செய்துவிடுவார். நிச்சயமாக உண்மையான ஒருவரையே அவர் இப்பணிக்கு அமர்த்த விரும்புகிறார். மகன் சரியாக நடந்து கொண்டால், உண்மையை தந்தையிடம் கூறுவது. இல்லையென்றால் அவனிடமுள்ள தவறு என்னவென்று எடுத்துக் கூறுவது. உலகப்பிரகாரமான தந்தையே அவ்விதம் நினைத்தால்... நீங்கள் அமர்த்தும் பள்ளி ஆசிரியர் உங்கள் பிள்ளையின் முன்னேற்றத்தைக் குறித்து உண்மையைக் கூற வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் அல்லவா? நிச்சயமாக. அப்படியிருக்க, தேவன் என்ன நினைப்பார் என்று நினைக்கின்றீர்கள்? அவருக்கு எல்லாம் தெரியும். நமக்குத் தெரியாது. நாம் முடிவுள்ளவர்கள் (finite), நம்மால் கூறமுடியாது. ஆனால் அவர் முடிவற்றவர் (infinite). அவருக்கு எல்லாம் தெரியும். 85எனவே பிதா என்ன செய்தார் தெரியுமா? அவர், “என் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள போப்பாண்டவரை நியமிப்பேன்” என்று கூறவில்லை. அல்லது “ஒரு பேராயரை நியமிப்பேன்'' என்று கூறவில்லை. இல்லை, இல்லை, அவர் அப்படி செய்யவில்லை. ஏனெனில் போப்பாண்டவரும், பேராயரும் தவறு செய்பவர்கள் என்று அவருக்குத் தெரியும். பாருங்கள்? ”என் சபைகளைக் கண்காணிக்க பொதுவான கண்காணிப்பாளர் (General Overseer) ஒருவரை நியமிப்பேன்“ என்றும் அவர் கூறவில்லை. இல்லை. இல்லை. அவர் அதற்கென பரிசுத்தஆவியை நியமித்தார். அது தான் அவருடைய பிள்ளைகளை வளர்க்க அவர் நியமித்த உபாத்தியர். சரி. பரிசுத்த ஆவியானவருக்குத் தெரியும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அவர் மனித உதடுகளின் மூலம் பேசுகின்றார். அவர் சத்தியத்தைப் பேசுகின்றார் என்று எப்படி அறிவீர்கள்? பரிசுத்த ஆவியானவர் மனித உதடுகளின் மூலம் ஒவ்வொரு முறையும் ஒரு காரியத்தை முன்னறிவித்து அவர் முன்னுரைத்தபடியே அது நிறைவேறுமானால், சாமுவேல் கூறியது போல், அப்பொழுது அது சத்தியம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் அது அப்படியே நிறைவேறுகின்றது. “அவன் சொன்னது நிறைவேறாமற் போனால், அவனுக்குச் செவிகொடுக்க வேண்டாம். ஏனென்றால் நான் அவனுடன் கூட இல்லை ஆனால் அவன் சொன்னது நிறைவேறினால் அவனுக்குச் செவிகொடுங்கள், ஏனென்றால் நான் அவனுடன் கூட இருக்கிறேன்” என்று கர்த்தர் கூறியுள்ளார். பார்த்தீர்களா? அப்படித்தான் அவர் கிரியை செய்கிறார். 86அவர் சுற்றி சுற்றி வருகிறார். அந்த உபாத்தியர் பிதாவிடம் சென்று, “உங்கள் பிள்ளைகள் மோசமாக நடந்து கொள்கின்றனர். உம்முடைய பையன் துரோகி. அவன் ஊர் சுற்றுபவன். அவனைப் போல் மோசமான ஒருவனை நான் பார்த்ததே கிடையாது. அவன் என்ன செய்கிறான் தெரியுமா? உம் மகளைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களோ எனக்குத் தெரியவில்லை. மற்ற பெலிஸ்தியப் பெண்களைப் போல் அவளும் முகத்தில் வண்ணம் தீட்டிக் கொள்கிறாள். அவர்களைப் போல் அவளும் இருக்க விரும்புகிறாள்'' என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ''என் மகளா?'' ''ஆம், உங்கள் மகள் தான்“. இன்றைய சபைகளைக் குறித்து அப்படித்தான் பரிசுத்த ஆவியானவர் சொல்ல வேண்டியவராயிருப்பார். நம்மிடையே எழுப்புதல் உண்டாகாமல் போவதில் வியப்பொன்றுமில்லை. பாருங்கள்? அது உண்மை. 87''உங்கள் மகனைக் குறித்து மாத்திரமென்ன?, அவனும் அப்படித்தான்“. ''என்ன?'' ''அந்த ஆடுகள், ஆடுகளுக்குரிய ஆகாரமாகிய அந்த புல்லைத்தான் மேய வேண்டுமென்று நீங்கள் உத்தரவிட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? அந்த ஆடுகளை குவியலுக்கு (Weed pile) ஓட்டிச் சென்று, அந்த ஓடையில் அவைகளை விட்டுவிட்டான். அவை மெலிந்து போய், அங்கிருந்து எழுந்திருக்கக் கூட பெலனில்லை'' அதுதான் தேவனு டைய வல்லமையை மறுதலிக்கும் பேராயர்களும் போதகர்களும். ''அவ்வாறு பயந்த சுபாவமுள்ள ஆடுகளை என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. அந்த மாட்டு மந்தையை கொழுக்க வைக்க ஆல்ஃபால்பா (Alfalfa) புல்லில் மேய்க்கச் சொன்னீர்கள் அல்லவா?'' ''ஆமாம்'', ''அவன் அவைகளுக்கு என்ன கொடுக்கிறான் தெரியுமா“? ''தெரியாது.'' ''இரும்பு களைகளை (Iron Weeds). ஆமாம். அவை சங்கங்களை (Councils) சேரும்படி செய்கின்றான். அப்படிப்பட்டவைகளை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்டிருக்க முடியாது? அவன் வேறு என்ன செய்கிறான் தெரியுமா? ஒரு பெரிய சுருட்டைப் புகைத்துக் கொண்டு செல்கிறான். அவனுடைய மனைவி பெலிஸ்திய பெண்களைப் போல் குட்டை கால்சட்டை அணிகிறாள். இப்படிப்பட்ட ஒரு செய்தியைத் தான் பரிசுத்த ஆவியானவர் இன்றைய சபைகளைக் குறித்து அளிக்க முடியும், இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் நம்மை சுவிகார புத்திரராகும்படிக்கு முன் குறித்தார். நமக்கு அவர் பரிசுத்த ஆவியை தந்தருளினார். ஆனால் சற்று பொறுங்கள், புத்திரசுவிகாரம். அதைக் குறித்துதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் - புத்திரசுவிகாரம்! 88பரிசுத்த ஆவியானவர் என்ன செய்கிறார் தெரியுமா? “ஒரு சகோதரன் அங்கு தெய்வீக சுகமளிக்கும் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது, பேராயர் ஒருவர் அவ்வழியே வந்தார். அந்த சகோதரன் அப்பொழுது வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தார். அதைக் கண்ட பேராயர், 'அதை நிறுத்து' என்றார்”. “ஓ, சரி பேராயரே, நான் நிறுத்திக் கொள்கிறேன்''. “நீ அவர்களுடன் ஒத்துழைக்கக் கூடாது''. ''சரி, பேராயரே, நிச்சயமாக இவ்விஷயத்தில் நான் ஒத்துழைக்கமாட்டேன்“. பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து, “உம்முடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தை நான் எடுத்துரைக்கிறேன். என்னசெய்ய வேண்டுமென்று உம்முடைய பிரமாணங்கள் கூறுகின்றனவோ அவைகளை நான் படித்துக் காண்பிக்கிறேன். அப்படியிருந்தும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார். அது வேறொரு காலத்துக்குரியதென்றும்”, “அது வேறொரு புத்திரனைக் குறிக்கிறது, என்னையல்ல, என்கிறார் அவர்'', என்று கூறுகிறார். பார்த்தீர்களா? நண்பர்களே, அது தான் உண்மை. சபை அதன் ஸ்தானத்தை எங்கு இழந்துவிட்டதென்றும், நம்மிடையே ஏன் எழுப்புதல் உண்டாவதில்லையென்றும், நமக்கு ஏன் காரியங்கள் முன்னேறுவதில்லையென்றும் உங்களால் காண முடிகிறதல்லவா? இதுதான் காரணம். 89யோசுவா, “காத் வரைபடத்தின்படி (Blue print) என்னுடைய தேசம் இங்குள்ளது. அங்கு சென்று நீ குடியேற வேண்டும். பென்யமீன், நீ அங்கு செல்வாயாக. பெலிஸ்தியரின் எல்லைகளை விட்டு நீங்கள் எல்லோரும் அப்புறம் செல்லுங்கள்'' என்றான். யோசுவா திரும்பி வருகிறான். அப்பொழுது அவர்கள் எல்லோரும் பெலிஸ்தியருடன் நடனமாடி, பெண்கள் முகத்தில் வர்ணம் பூசி நடனமாடி, கும்மாளம் அடிப்பதைக் கண்டான். அப்பொழுது யோசுவா தலையை சொரிந்து கொண்டே, 'இது என்ன?' என்றான். இன்றைக்கும் அப்படியே நடக்கின்றது. எல்லோரும் அல்ல. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எல்லோரும் அல்ல, அநேகர். சரி. 90பின்னர் என்ன நடக்கின்றது? என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் இதை பிதாவினிடத்தில் எடுத்துக் கூறும் போது வெட்கப்படமாட்டார் என்று நினைக்கிறீர்களா? ஓ, என்னே நான் அவனிடம் சொன்னேன். அவனோ கேட்கமாட்டேன் என்கிறான். அவனை வேதாகமத்திலிருந்து வசனங்களைப் படிக்கும்படி செய்தேன். ஒரு சிறு போதகர் அவனுக்கு இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்பதை உணர்த்திக் காண்பிக்கும்படி செய்தேன். ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? வெள்ளாடுகளை மேய்க்கும் ஒருவன் அங்கு வந்து, அது வேறொரு காலத்துக்குரியது என்று கூற அவன் அனுமதித்தான். அந்த வெள்ளாடு மேய்ப்பன் அங்கு வந்த போது, அவன் மேல் வெள்ளாட்டின் துர்நாற்றம் இருந்தது - சுருட்டு மணம் போன்றவை. அவன் அங்கு வந்தபொழுது துர்நாற்றம் சகிக்க முடியவில்லை. ஆயினும் அந்த மேய்ப்பன் தன் சட்டையில் அநேக பதக்கங்களை குத்தியிருந்தான். அவனுடைய பெயரை ஒரு தாளில் எழுதினால், அவன் பெற்றுள்ள பட்டங்களை மாத்திரம் எழுத பாதி நாள் வேண்டும். ஆம், ஐயா. நாட்டில் அவனை எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் நான் கூறுகிறேன், செம்மறியாடுகளைப் போஷிக்க அவனுக்குத் தெரியாது. அவன் எனக்கு செவி கொடுக்க மறுக்கிறான்“ என்று பரிசுத்த ஆவியானவர் கூறுவார். ''நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறீர் என்று நானும் எவ்வளவோ அவனிடம் கூறிப் பார்த்துவிட்டேன். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். என் வாழ்க்கையில் நான் கண்டவர்களிலே அவனே மிகப் பெரிய கோழை. ஆம், ஆயினும் சபை அவனை கண்காணிப்பாளனாக, பேராயராக நியமித்திருக்கிறது. எல்லோரும் அவனுக்குச் செவிகொடுக்கின்றனர். பின்னர் என்ன தெரியுமா? அவர்களிடம் தொலைகாட்சிப் பெட்டி என்னும் ஒரு கருவியுண்டு. அதை அவர்கள் இயக்கும் போது அரை நிர்வாணப் பெண்கள் அதில் தோன்றுகின்றனர். உம்முடைய குமாரத்திகளில் அநேகர்... “இருக்காதே, அப்படியா?'' 91பரிசுத்த ஆவியானவர், ''ஆம், அவர்களும் அப்படித்தான் செய்கின்றனர் சிலர் எழுப்புதலுக்காக கதறிக் கொண்டிருக்கின்றனர். பிதாவே, சிலர் உண்மையாகவே எழுப்புதல் வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் உம்முடைய வழிகளில் நடக்கின்றனர். வேறு சிலர் அவர்களால் இயன்ற வரை தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நிற்கின்றனர். மற்றவர்களோ - எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை - அவர்கள் அதிகமாக வழி தவறியிருக்கின்றனர். அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா? தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுபவர்களை அவர்கள் பார்த்து, அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று கேலி செய்கின்றனர்.'', ''அதை கேட்பதற்கு எனக்குக் கவலையாயுள்ளது. 92இப்பொழுது நாம் இந்த காட்சியை மாற்றிப் பார்ப்போம். இந்த காட்சியில் மகன் மிகவும் நல்லவன். அவனுடைய உபாத்தியர் பரிசுத்த ஆவியானவர். “நான் நடக்க போகிறேன். என்று பரிசுத்த ஆவியானவர் கூறினால்...” மகன் நானும் உம்முடன் கூட நடந்து வருவேன்“ என்கிறான். ''ஓ, மகனே, மலைகள் அங்கு உள்ளன.'' “எப்படியாயினும், நான் உம்முடன் கூட வருவேன். உம்மிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. எனக்கு களைப்பு ஏற்பட்டால், நீர் என் கை பிடித்து தாங்கிக் கொள்வீர்.'' ''அந்த மலைகளின் மேல் சிங்கங்கள் உள்ளன.'' ''நீர் என்னுடன் இருக்கும் வரைக்கும் எனக்கு எவ்வித பயமும் கிடையாது. நான் உம்முடன் கூட வருவேன்.'' ''பாறை செங்குத்தாயுள்ளது. அங்கு தொந்தரவு நேரிடக் கூடும்.'' ''நீர் என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் வரைக்கும் எனக்கு எவ்வித பயமுமில்லை. நான் உம்முடன் கூட நடந்து செல்வேன்“. ''உனக்குத் தெரியுமா? உன் தந்தையும் (இயேசுவும்) அப்படித்தான் செய்தார்.'' ''மிகவும் நன்று, ஆம், ஐயா!“ 93அவர்கள் மலையின் உச்சியில் ஏறினார்கள். பரிசுத்த ஆவியானவர், “பிதாவே உமக்குத் தெரியுமா? உமது குமாரன் உம்மைப் போன்றே அப்படியே இருக்கிறான். நீர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் அவன் 'ஆமென்' என்று சொல்லி ஆமோதிக்கிறான். அன்றொரு நாள் அவனிடம் வேதாகமத்தைத் திருப்பக் கூறினேன். அதில் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது. அவன் என்ன கூறினான் தெரியுமா? அவன் கூச்சலிட்டு, கைகளை மேலேயுயர்த்தி, 'அல்லேலூயா', ஆமென்!” என்றான். 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்' என்று உம்முடைய வசனம் கூறுகிறதல்லவா?'' ''ஆமாம், என் மகனுக்கு அது எழுதி வைத்தது ஞாபகமுள்ளது.'' ''ஓ, அவன் அதை பார்த்தபோது, மேலும் கீழும் குதித்து ஆரவாரமிட்டு, 'ஆண்டவரே, அல்லேலூயா' உலக காரியங்கள் அனைத்தும் என்னை விட்டு எடுத்துப் போடும், என்னை அவ்விதம் மாற்றிப் போடும் என்றான். ஆம், ஐயா. இவையெல்லாவற்றையும் அவன் செய்தான்.'' அப்பொழுது பிதா, “ஓ, என் குமாரனுக்காக நான் களி கூறுகிறேன். அவன் மிகவும் அருமையானவன் இன்னும் சில ஆண்டுகள் அவனைக் கவனித்துக் கொள்ளுங்கள்''. 94சில ஆண்டுகள் கடந்தவுடன், “பையன் எப்படியிருக்கிறான்?'' “ஓ, அவன் கிருபையில் வளர்ந்து வருகிறான். அவன் உலக காரியங்களைப் புறக்கணித்துவிட்டான். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவன் உண்மையாகவே... அவன் ஆடுகளை உம்மைப் போலவே வழிநடத்திச் செல்கிறான். அவைகளுக்கு அவன் கடல் களையையோ (Sea Weeds) அல்லது இரும்புக் களையையோ (iron Weeds) கொடுப்பதில்லை. அவை அவனிடம் வந்து, 'நாங்கள் சபைகளைச் சேர விரும்புகிறோம்' என்று கூறினால், அவன், 'வாயை மூடுங்கள். உங்களுக்கு அது அவசியமில்லை. இது தான் உங்களுக்கு அவசியம்: நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்' என்கிறான்.'' ''உண்மையாகவா அப்படி சொன்னான்?“ “ஆம், ஐயா! உண்மையாகத் தான்.'' ''அப்படித் தான் நான் அதை வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கிறேன்.'' “அப்படித் தான் அவனும் கூறினான்.'' ''ஹம், ஆம், ஐயா.'' 95''நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் தங்கியிருங்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்“ என்று வேதத்தில் வாசித்தவுடனே 'அல்லேலூயா அது தான் உங்களுக்கு அவசியம் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டான். அவன் என்ன செய்கிறான் தெரியுமா? அவர்கள் அதை அடைந்தவுடன், அவனும் அதை அடைந்து அதில் நிலை கொள்கிறான். அவர்கள், 'அப்படியில்லை' என்று சொன்னால், அவன், 'ஊப், ஊப்,' சற்று பொறுங்கள், சற்று பொறுங்கள், வெள்ளாடுகள் அப்படித் தான் நடந்து கொள்கின்றன. செம்மறியாடுகள் அல்ல என்கிறான். பாருங்கள்? ஓ, சில நேரங்களில் அவைகளுக்கு அவன் மேல் எரிச்சல் தோன்றுகிறது. அப்பொழுது அவன் அவைகளுடைய முதுகில் தட்டிக்கொடுத்து, 'ஊஷ், ஊஷ், சற்று பொறுங்கள். பரவாயில்லை' என்கிறான். செம்மறியாடுகளை கட்டுக்குள் கொண்டு வர அவனுக்குத் தெரியும். ஆம், ஐயா! 96''உங்களுக்குத் தெரியுமா? தலைமை பேராயர் இன்னார் அவனிடம் இந்த பட்டினத்தில் கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்வதைக் கேட்டேன். நானோ அவனிடம், 'நீ எப்படியும் போய் கூட்டம் நடத்து' என்றேன். இந்த ஒலிநாடாக்களை நீ வெளியே அனுப்பக் கூடாது என்று அவனுடன் சொல்லப்பட்டது. ஆயினும் அவை வெளியே அனுப்பப்பட்டன. அந்த பட்டினங்களுக்கெல்லாம் அவை சென்றன''. ''பிசாசு அங்கு வந்து, அந்த பட்டினத்துக்கு அவன் வராத படி என்னால் தடை செய்ய முடியும் என்று சவால்விட்டான். நான் அவனிடம், 'உன்னால் முடியாது. அவனிடம் நான் போகக் கூறினால், அவன் கண்டிப்பாக போவான்' என்றேன். அவனோ, முடியவே முடியாது. நான் என் கையாட்களிடம் சென்று: நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பழைய மூடபக்தி, வைராக்கியம், தெய்வீக சுகமளித்தல் பரிசுத்த ஆவியின் கிரியைகள் போன்றவை எங்களுக்கு அவசியமில்லையென்றும், அது அப்போஸ்தலருடைய காலத்திலேயே முடிவு பெற்றதென்றும், இப்பொழுது அதனால் எந்த உபயோகமுமில்லையென்றும் சொல்லுங்கள் என்பேன் என்றான். அவன் பழைய இரும்புக் களையை கொடுக்க முயன்றான்''. 97''ஆனால் என்ன நேர்ந்தது தெரியுமா? அவன் எப்படியும் சென்று கூட்டத்தை நடத்தி, ஆல்ஃபா, ஆல்ஃல்பா, புல்லை கொடுக்க ஆரம்பித்தான். அதை கொடுத்து விட்டு திரும்பி வந்தான். என்ன தெரியுமா? ஆடுகள் அதை தின்னத் தொடங்கின அவை கொழுத்து வருகின்றன, ஆம் ஐயா. அங்கு சுகமாக்குதலும், கூட்டங்களும் நடப்பதைக் கண்டவுடனே, அநேக வாலிபர்கள் சேரத் தொடங்கினர். அத்தகைய ஆல்ஃபா, ஆல்ஃபா, புல் கட்டை அவர்கள் கண்டபோது, அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அயலாரிடம் சென்று, 'இதை சாப்பிடுங்கள், இதை சாப்பிடுங்கள்! வாலிபரே, 'ஆயத்தப்படுங்கள்' என்றனர். ஆம். ஐயா அது இங்குள்ளது, இங்குள்ளது, 'நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள். விருப்பமுள்ளவர் எவரும் இங்கு வந்து வேதாகமத்தில் கூறியுள்ளதைக் காணட்டும் என்கின்றனர். அவர்களுக்கு மகத்தான நேரம் உண்டாயிருக்கிறது!“ ''ஓ, அது தான் என் குமாரன், அது என் பையன், அவன் முதிர்வடைந்துவிட்டான் என்று நினைக்கின்றீர்களா?'' 98“ஆம் நிச்சயமாக'' என்கிறார் பரிசுத்த ஆவியானவர். ''அவனுக்கு நான் அநேக சோதனைகளைக் கொடுத்தேன். அவனை இவ்விதம் பரிசோதித்தேன், அவ்விதம் பரிசோதித்தேன். அவனை வியாதிக்குட்படுத்தினேன், அவனைக் காலின் கீழ் போட்டு மிதித்தேன். பிசாசால் என்னவெல்லாம் கூடுமோ, அதையெல்லாம் அவனுக்குச் செய்ய நான் அனுமதித்தேன். ஆயினும் அவன் பழைய நிலைக்கே வந்துவிட்டான். அவன் எப்பொழுதும் போலவே இருக்கிறான். அவனுக்கு வியாதியைக் கொடுத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்தேன். அவனுக்கு இதை செய்தேன், அதை செய்தேன். அவனுடைய மனைவியை அவனுக்கு விரோதமாக எழுப்பினேன். எல்லாவற்றையும் அவனுக்கு விரோதமாக்கினேன். ஆயினும் இவையாவும் அவனில் எந்தவித வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. அவனோ, அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்' என்கிறான். அவனுடைய குடும்பத்தினரை நான் கொன்றேன். நான் இதை எடுத்துக் கொண்டேன். நான் இதை, அதை, மற்றதை செய்தேன், அப்படியிருந்தும் அவன் உறுதியாய் நின்று, அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவரையே சேவிப்பேன். அவர் எனக்குச் சொந்தமானவர் என்கிறான்.'' “ஓ! அவனை நாம் ஒரு விசேஷித்த இடத்திற்கு அழைத்து சென்று, புத்திர சுவிகாரம் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.'' பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒரு தகப்பன், தன் மகனுக்கு வயது வந்துவிட்டது; புத்திரசுவிகாரம் பெற்றுக் கொள்ள அவன் பயிற்சி பெற்றுவிட்டான் என்று அறியும்போது, சுவிகாரபுத்திரராகும்படிக்கு! அவன் குழந்தையாகப் பிறந்தான். ஆனால் மகனாக வளர்ந்துவிட்டான். அவன் முதிர்வடைந்து அவனுடைய திறனைக் காண்பிக்கும் வரைக்கும் அவன் ஒரு சாதாரண மகனாகவே இருப்பான். அதன் பின்பு தகப்பன் அவனை அழைக்கிறான். 99சபையே, இங்கு தான் நாம் வந்திருக்கிறோம். நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? இப்பொழுது சற்று தாமதமாகிவிட்டது. எனவே நீங்கள் உங்கள் விரலைக் கடித்துக் கொண்டு, உங்கள் ஆத்துமாக்களையும் இருதயங்களையும் சற்று சோதித்தறியுங்கள். இப்பொழுது சபையை அதன் ஸ்தானத்தில் நாம் பொருத்தப் போகிறோம் சபையானது அதன் ஸ்தானத்தை அடையும்போது, அவர், “மனாசே, இந்த இடம் உனக்குச் சொந்தமானது. எப்பிராயீமே, அங்கு போ” என்கிறார். பின்பு தகப்பன் மகனை ஒரு பிரத்தியேக இடத்திற்கு கொண்டு சென்று, இது போன்ற ஒரு உயரமான இடத்தில் உட்கார வைத்து ஒரு வைபவம் நடத்துகின்றார். எல்லோரும் வைபவத்திற்கு வருகை தருகின்றனர். அப்பொழுது தகப்பன், ''இவன் என் மகன் என்று எல்லோரும் அறிய விரும்புகிறேன். என் மகனை சுவிகாரப் புத்திரனாக ஏற்றுக் கொள்கிறேன். இன்று முதல் அவனுடைய பெயர்... அவனுக்கு விசேஷித்த ஆடையை அணிவிக்கிறேன். இன்று முதல் அவன் பெயர் என் பெயரைப் போன்றே காசோலையில் முக்கியம் வாய்ந்ததாயிருக்கும் என்று யாவரும் அறிய விரும்புகின்றேன். அவன் என் மகன். அவன் பிறந்த முதற்கே என் குமாரனாயிருந்த போதிலும், இப்பொழுது அவனைக் குமாரனாக என் குடும்பத்தில் ஏற்றுக் கொள்கிறேன். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதால், என் குமாரனாகிவிட்டான். இப்பொழுது நான் அவனை அதிகாரத்தில், அவனுடைய ஸ்தானத்தில் வைக்கப் போகிறேன். அவன் யாரை வேலை நீக்கம் செய்கிறானோ அவன் வேலை நீக்கம் செய்யப்படுவான். யாரை வேலைக்கு அமர்த்துகிறானோ, அவன் வேலைக்கு அமர்த்தப்படுவான்'' என்கிறான். ''எவனாகிலும் இந்த மரத்தைப் பார்த்து, இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' (மத். 11:23). பாருங்கள்? ''அவன் என் குமாரன்“ அவன் குமாரன் என்று தன்னை நிரூபித்த பின்பே , சுவிகாரப் புத்திரனாக சேர்த்துக் கொள்ளப்பட்டான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?வேதாகமத்தைப் படித்த எவருக்கும். ஒரு குமாரனை அவன் ஸ்தானத்தில் பொருத்துதல். 100இயேசு மறுரூப மலையின் மேல் சென்றபோது, தேவன் தம்முடைய குமாரனுக்கு அதையே செய்தார். இயேசு பேதுரு, யாக்கோபு, யோவானை மறுரூப மலையின் மேல் கொண்டு சென்றார் - பூமியின் மூன்று சாட்சிகள். அங்கு மலையின் மேல் இயேசுவும். மோசேயும், எலியாவும், தேவனும் இருந்தனர். அவர்கள் மலையின் மேல் நின்றனர். முதலாவதாக அவர்கள் பார்த்தபோது, இயேசு அவர்களுக்கு முன்பாக மகிமையடைந்தார். அது சரியா? அது வேத பூர்வமானது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தேவன் இயேசுவை என்ன செய்தார்? அவரை அழியாமை என்னும் வஸ்திரத்தால் உடுத்துவித்தார். அவருடைய வஸ்திரம் சூரியனைப் போல் பிரகாசித்தது. அது சரியா? ஒரு மேகம் அவரை நிழலிட்டது. பேதுரு, யாக்கோபு, யோவான் முகங்குப்புற விழுந்தனர். அவர்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் மோசேயும் எலியாவும் அங்கு நின்று கொண்டு இயேசுவுடன் பேசுகிறவர்களாக காணப்பட்டனர். மோசே மரித்து, எவருமே அறியாத கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு எண்ணூறு ஆண்டுகளாயிருந்தன. இச்சம்பவம் நிகழ்வதற்கு ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர், எலியா ஒரு ரதத்தில் ஏறி பரலோகத்திற்கு சவாரி செய்து சென்றான். ஆயினும் அவர்கள் இருவரும் அங்கே இருந்தனர். அவர்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைக் காணவும், இவைகளைக் காண்பிக்கவும், தேவன் இயேசுவை மலையின் மேல் கொண்டு சென்றார். அங்கே அவர்கள் அவருடன் உரையாடினர். 101பேதுரு மறுபடியும் பார்த்தபோது, அந்த மகிமையின் நிலை இயேசுவை விட்டு சென்றிருந்தது. அவர்கள் இயேசுவைத் தவிர வேறொருவரையும் காணவில்லை மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவி கொடுங்கள். அவருடைய நாமம் என் நாமத்தைப் போன்றே மேன்மை வாய்ந்தது. அவருக்குச் செவி கொடுங்கள்'' என்றது. அது தான் புத்திர சுவிகாரம் - மகன் தன் ஸ்தானத்தில் வைக்கப்படுதல். அங்கு தான் தேவன் பெந்தேகோஸ்தே சபையை எபேசியர் நிருபத்தில் குறிப்பிட விரும்புகிறார். பாருங்கள்? உங்களுக்குப் புரிகின்றதா? தாமதமாகிவிட்டதால் நாம் முடிக்க வேண்டும். இங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு உறக்கம் வந்துவிட்டது. நான் 13-ம் வசனம் கடைசி பாகம் வரைக்கும் பிரசங்கிக்க வேண்டுமென்று நினைத்தேன். அதாவது ''வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்படுதல்'', ஆனால் இப்பொழுது முடியாது. நாம் ஞாயிறன்று அதை பார்க்கலாம் - எது நம்மை உள்ளே கொண்டு வருகிறது என்பதைக் குறித்தும், நாம் எவ்வாறு அதனால் காக்கப்படுகின்றோம் என்றும். 102இப்பொழுது, ''நீங்கள் எவ்வாறு உங்கள் ஸ்தானத்தில் வைக்கப்படுகின்றீர்கள்?' என்பதைக் குறித்துப் பார்க்கலாம். முதலாவதாக நீங்கள் பரிசுத்த ஆவியினால் ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கின்றீர்கள். எத்தனை பேருக்கு அது தெரியும்? சரி. அடுத்தபடியாக, நீங்கள் எதற்காக முன்குறிக்கப்படுகின்றீர்கள்? சுவிகாரப் புத்திரராகும்படிக்கு முன் குறிக்கப்படுகின்றீர்கள். 103ஓ, அங்கு உட்கார்ந்திருப்பது சகோதரி ஸ்காட் என்று நினைக்கிறேன். அந்த ஸ்திரீயுடன் கூட நீங்கள் தானே இருந்தீர்கள்? உலகில் எங்கோ ஒரு பாகத்தில், நாட்டின் வெவ்வேறு பாகங்களில், ஒரு விசித்திரமான போதகம் நிலவி வருவதாக கேள்விப்பட்டேன். அதாவது இயேசு ஒரு சரீரத்தில் பூமியில் நடந்து கொண்டிருக்கிறாரென்றும், அவர் இப்பூமிக்கு வந்து இன்னின்னதை செய்து கொண்டிருக்கிறார் என்னும் போதகம். அது பொய் அவருடைய பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கின்றார். அவர் சபையை ஒழுங்குப்படுத்தி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அதை வைக்க முயன்று வருகிறார்... அப்பொழுது எல்லா சத்துருக்களும் விரட்டியடிக்கப்படுவார்கள். 104மனாசே இப்பொழுது அவனுக்குச் சொந்தமான தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியவில்லை. பாதிக்கு மேல்... என்னால் சுகமளிக்கும் ஆராதனையை நடத்த முடிவதில்லை. நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தால், திரித்துவ சகோதரர்கள், ''ஓ அவன் இயேசு மாத்திரம் குழுவைச் சேர்ந்தவன்'' என்கின்றனர். என்னால் சுகமளிக்கும் ஆராதனையை நடத்த முடிவதில்லை, ஏனெனில் பாதிக்கு மேல், “தெய்வீக சுகமளித்தல் என்பது சரிதான்'' அநேகர் தேவனுடைய அற்புதங்களை அனுபவிக்கின்றனர். அவர்கள், ”தெய்வீக சுகமளித்தல் என்பது சரிதான். சகோ, பிரன்ஹாம் ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறேன். ஆனால் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன். அவர் மேல் ஆவியானவர் தங்கி, அவர் இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறும் வரை, அவர் தேவனுடைய ஊழியக்காரன் தான். ஆனால் அவருடைய போதகமோ அழுகிப்போனது. அது மோசமானது'' என்கின்றனர். இத்தகைய மூடத்தனமானவைகளை நீங்கள் கேட்டதுண்டா? ஒன்று அது தேவனுடையதாய் இருக்கவேண்டும், இல்லையேல், அது தேவனுடையதல்லாமல் இருக்கவேண்டும். அது உண்மை. அது எல்லாமே தேவனாயிருக்க வேண்டும். அது உண்மை. அது எல்லாமே தேவனாயிருக்கவேண்டும். அல்லது ஒன்றுமே தேவனுடையதல்லாமல் இருக்கவேண்டும். அப்படித்தான் அது இருக்கவேண்டும். உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் எப்படி செயல்படப் போகின்றீர்கள்? மனாசே தன் தேசத்தில் இருக்க மறுக்கின்றான், எப்பிராயீம் தன் தேசத்தில் இருக்க மறுக்கிறான், காத் தன் தேசத்தில் இருக்க மறுக்கின்றான், பென்யமீன் தன் தேசத்தில் இருக்க மறுக்கின்றான். அவர்கள் அனைவருமே பெலிஸ்தியருடன் ஒன்று கலந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க நாம் எவ்வாறு நம்முடைய ஸ்தானத்தில் வைக்கப்பட முடியும்? நாம் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் பிறந்திருக்கின்றோம். அது சரியா? நாம் எதற்குள் பிறந்திருக்கிறோம்?முன்குறிக்கப்படுதல்... நாம் பிறந்த பின்பு, கிறிஸ்துவின் சரீரத்தில் பொருத்தப்படுவதற்கென சுவிகாரப் புத்திரராகும்படிக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறோம். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகின்றதா? 105கிறிஸ்துவின் சரீரம் என்றால் என்ன? சிலர் அப்போஸ்தலர்களாகவும், சிலர் தீர்க்கதரிசிகளாகவும், சிலர் போதகர்களாகவும், சிலர் சுவிசேஷகர்களாகவும், சிலர் மேய்ப்பர்களாகவும் இருக்கின்றனர். அது சரியா? அதற்கென்று நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். வேறு சிலருக்கு பற்பல பாஷைகளைப் பேசும் வரங்கள், பாஷைகளை வியாக்கியானம் பண்ணும் வரங்கள், ஞானம், அறிவு, அற்புதங்களைச் செய்யும் வரங்கள் போன்ற வெவ்வேறு வரங்கள் அளிக்கப்பட்டன. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதை சிறிது மாத்திரம் உபயோகித்தனரா? என்ன? அல்லது குழப்பம் உண்டாக்கும் அளவுக்கு அதை உபயோகித்தனரா? ஒருவன் எழுந்து அந்நிய பாஷை பேசுதலும், அதே சமயம் மற்றொருவன் பேசிக் கொண்டிருப்பதும் (சகோ. பிரன்ஹாம் ஒழுங்கின்மையும் குழப்பமும் உண்டாக்கும் சத்தத்தை எழுப்புகிறார் - ஆசி). அப்படித்தான். போதகர் பிரசங்கம் செய்து, “பீட அழைப்பு, விடுத்துக் கொண்டிருப்பார். அந்நேரம் ஒருவன் எழுந்து நின்று, அந்நிய பாஷை பேசி, 'அல்லேலூயா', தேவனுக்கு மகிமை! என்று சொல்லிக் கொண்டிருப்பான். போதகர், தான் பெற்றுள்ள அபிஷேகத்தினால் தொடர்ந்து பிரசங்கம் செய்து கொண்டு போனால், உடனே ஜனங்கள், அவர் பின்வாங்கிப் போனவர்” என்கின்றனர். அவர்கள் சரியாக போதிக்கப்படவில்லையென்று அர்த்தம். 106“தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறது'' என்று வேதம் கூறுகின்றது (Iகொரி.14:32). தேவன் குழப்பத்திற்கு காரணரேயல்ல. நான் இங்கு நின்று கொண்டிருக்கும் போது, தேவனுடைய அபிஷேகத்தைக் கொண்டவனாய் ஊழியம் செய்கிறேன். உங்களுக்கு எவ்வளவு தான் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்று தோன்றினாலும், தேவன் இங்கு முடிக்கும் வரைக்கும் நீங்கள் மெளனமாயிருக்க வேண்டும். அதன் பின்பும் நீங்கள் அந்நிய பாஷை பேசும்போது, வேத வாக்கியங்களை திரும்பத் திரும்ப உரைப்பதாக அது அமைந்திருக்கக் கூடாது. ஏனெனில், நீங்கள் வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது (ஆங்கிலத்தில்; use not vain repetitions) என்று தேவன் கூறியுள்ளார் (மத். 6:7). அது யாராகிலும் ஒருவருக்கு நேரடியாக அளிக்கப்படும் ஒரு செய்தியாக அமைந்திருக்க வேண்டும். என்னில் சிந்தனைகளைப் பகுத்தறியும் வரம் கிரியை செய்யும் போது, எப்பொழுதாகிலும் ஒருமுறை பரிசுத்த ஆவியானவர் வேதவாக்கியங்களை திரும்பத் திரும்ப உரைத்த நேரம் ஒன்றையாகிலும் சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம். அவர்களில் காணப்படும் தவறு என்னவென்றும், அவர்கள் என்ன செய்துள்ளனர் என்றும், அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், அல்லது என்ன நிகழப்போகிறது என்றும் அது எடுத்துரைத்தது. அது சரியா? அது போன்று தான் பாஷை பேசுதலும், அதற்கு அர்த்தம் உரைத்தலும்! அந்நிய பாஷை பேசும் ஒருவர் சபையில் இருந்து, அதற்கு அர்த்தம் உரைக்கும் வேறொருவரும் அங்கு இருப்பாரானால், அது இப்படி அமைய வேண்டும். சகோ. நெவில் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசினாரென்றும், இந்த சகோதரன் அதற்கு இவ்விதம் அர்த்தம் உரைத்தார் என்றும் வைத்துக் கொள்வோம்: ''நேற்று இந்த மனிதன் இன்னின்ன இடத்திற்கு சென்று இன்னின்ன தவறு செய்தார் என்று அந்த மனிதனிடம் சொல். அவருக்கு புற்று நோய் இருப்பதாக மருத்துவர் இன்று அவரிடம் அறிவித்தார். நீ செய்த தவறை சரிபடுத்தி, மீண்டும் தேவனிடத்தில் ஒப்புரவாகு''. அப்பொழுது அந்த மனிதன், ''நீர் கூறினது உண்மை'' என்பனானால் தேவன் உன்னுடன் இருக்கிறார். 107ஆனால் நாம் எப்படி இதை செய்யப் போகிறோம்? பாருங்கள்? அது மோதல், மோதல் - எல்லாம் குழப்பமாக உள்ளதே!எதுவுமே சரியான விதத்தில் பொருத்தப்படவில்லை. அது அவர்களுக்கு கைகூடவில்லை. நாம் சுவிகாரப் புத்திரராகும் படிக்கு முன் குறிக்கப்பட்டிருக்கிறோம். நான் கூறுவதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? கைகளையுயர்த்துங்கள். புத்திர சுவிகாரம்! தேவனுடைய ஆவியினால் நாம் பிறந்தோம். நிச்சயமாக. நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, “அப்பா, பிதாவே! அல்லேலூயா தேவனுக்கு மகிமை!'' என்று கூச்சலிடுகிறோம். அதெல்லாம் சரி. நாம் பிள்ளைகள். ஆனால் அது நம்மை எங்கும் கொண்டு செல்வதில்லை. நாம் பெலிஸ்தியரை மடங்கடிக்க முடியாது. 108பில்லிகிரகாம் அங்கு நின்று கொண்டிருக்க, அந்த முஸ்லீம், ''அதை நிரூபியுங்கள், பார்க்கலாம்'' என்று சவால் விடுவதைப் பாருங்கள். ஜேக் கோ அங்கு நின்று கொண்டிருக்கிறார். 'கிறிஸ்து சபை' என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் ஒரு நாத்திகனுடன் கை குலுக்குவதை சற்று யோசித்துப் பாருங்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் ஜோலூயிஸ் போன்ற பிசாசுடன் கை குலுக்குகின்றனர். ஜோலூயிஸ் 'சுயாதின யோசனைக்கார்' (Free thinker) குழுவைச் சேர்ந்தவன். அவன் தேவனைச் சபித்து, ''தேவன் என்பவர் கிடையவே கிடையாது'' என்று சொன்னவன். அப்படிப்பட்டவனுடன் 'கிறிஸ்து சபை' கைகுலுக்கி, ஜேக் கோ என்பவருக்கு எதிர் தரப்பில் நிற்கிறது. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யமுடியும்? நமது நாட்டிலுள்ள போதகர் ஒவ்வொருவரும் ஜேக்கோவுக்கு தோள் கொடுத்து, ''தேவனே, உமது வல்லமையை அனுப்பும்'' என்று விண்ணப்பம் செய்வதற்கு பதிலாக, பெந்தேகோஸ்தேயினரில் அநேகர் அவருக்கு விரோதமாயுள்ளனர். பாருங்கள், நாம் நமது ஸ்தானத்தில் பொருத்தப்பட முடியாது. 109எப்பிராயீமுக்கு அவனுடைய நிலையில் தங்கியிருக்க விருப்பமில்லை. அவர்களில் ஒருவன் மனாசேயின் நிலத்திற்கு வந்து, ''ஓ, கர்த்தர் உனக்கு சோளம் விளையும் நல்ல நிலத்தை தந்திருக்கிறார்'' என்கிறான். காத் வந்து அதை பார்த்து விட்டு, “நான் ஓட்ஸ் பயிரிட வேண்டும். ஆனால் நான் சோளத்தை பயிரிடப் போகின்றேன்” என்கிறான். உனக்கும் சோளத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. நீ பயிரிட வேண்டியது ஓட்ஸ், எனவே ஓட்ஸ் பயிர் செய். மாடுகளை மேய்க்க நீ அனுப்பப்பட்டால், நீ ஆடுகளை மேய்க்கக் கூடாது. தேவன் சபையை அதன் ஸ்தானத்தில் வைக்கிறார். ஆனால் எல்லோரும் ஒரே காரியத்தைக் செய்ய விரும்புகின்றனர். அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே அவர்களிடம் கூறமுடியாது. இல்லை, இல்லை, இன்னும் அவர்களுக்கு வெள்ளாட்டின் சுபாவம் உள்ளது ''பட், பட், பட், பட், பட்'' பாருங்கள், அவர்களிடம் நீங்கள் ஒன்றையுமே கூற முடியாது. அது உண்மையல்லவா? அதன் விளைவால் நீங்கள் சபையை அதன் ஸ்தானத்தில் வைக்க முடியவில்லை. பாருங்கள்? 110சபையானது சுவிகாரப் புத்திரராகும்படிக்கு முன் குறிக்கப்பட்டது. அங்கு ஒரு மனிதன்... தேவன் ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டு, அவனைத் தம் குடும்பத்தில் சுவிகாரப் புத்திரனாக்கிக் கொண்டு, அவனுக்கு ஏதாவதொன்றை தரலாம். முதலாவதாக அவனை சோதித்தறிந்து, அது சரியா என்று பார்க்கவும். ஆவிகளை நாம் சோதித்தறிய வேண்டுமென்று வேதம் கூறுகின்றது (1யோவான். 4:1). இந்த மனிதன் சில காரியங்களைக் கூறினால், அது சரியா என்று சோதித்தறியுங்கள். அது சரியாயிருந்தால், அதனுடன் கூட நீங்களும் செல்லுங்கள். பின்பு, ''ஆண்டவரே, வேறொன்றை அனுப்பும் என்று கூறுங்கள். இவ்விதமாக, நீங்கள் எல்லோரும் அவனவன் ஸ்தானத்தை வகிக்கும் வரைக்கும், அவனவன் கூட செல்லுங்கள். அப்பொழுது தேவனுடைய சபை அதன் ஸ்தானத்தை வகிப்பதைக் காண்பீர்கள். அப்பொழுது தான் பெலிஸ்தியர் பின்வாங்கிப் போவார்கள். குட்டைகால் சட்டை அகன்றுவிடும். தலை மயிர் வளர விடப்படும், முகங்கள் வர்ணமின்றி கழுவப்படும், சுருட்டுகள் இருக்காது. அது உண்மை. சபையானது அதன் மகத்தான வல்லமையைப் பெறத் தொடங்கும் போது, சில அனனியாக்களும் சப்பிராக்களும் அப்பொழுது இருப்பார்கள். ஆம், ஐயா. அந்த பரிசுத்த சபை தேவனுடைய புத்திரராக அவரவர் ஸ்தானத்தை வகித்து, தேவனுடைய குடும்பத்தில் சுவிகாரப் புத்திரராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் வல்லமையில் ஒருமித்து நின்று, ஒரு, வல்லமையுள்ள சபையாக அதன் மகிமையில் நிற்க காண்பீர்கள். ஓ, அப்படிப்பட்ட சபைக்காகத் தான் அவர் வருகிறார். 111சகோதரரே, இந்நிலைக்கு நாம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்று பார்த்தீர்களா? நாம் வேதவாக்கியங்களுக்கும் கூட இணங்குவதில்லை. வேதத்தில் கூறப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறவன் எவனும் குருடனாயிருக்க வேண்டும், அல்லது அவனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த பிரச்சினையின் பேரில் தான் இன்று பெரிய விவாதமே நடக்கின்றது. புதிய ஏற்பாட்டின் சபையில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலன்றி வேறெந்த முறையிலாவது யாராகிலும் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், அதற்கான வேதவாக்கியத்தை என்னிடம் காண்பியுங்கள். வேறு வகையில் ஞானஸ்நானம் கொண்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிற்று. வேறெந்த வகையிலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையளிக்கப்படவில்லை இயேசுவும் கூட, ''நீங்கள் உலகமெங்கும் போய் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று அந்த அர்த்தத்தில் கட்டளையிடவில்லை. ஏனெனில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, எதுவுமே நாமமில்லை. பத்து நாட்கள் கழித்து பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றான். அதன் பின்பு வேதத்தில் எல்லாவிடங்களிலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக சான்றுகள் உள்ளன. 112அங்கு சிலர் வேறு விதமாய் யோவான் ஸ்நானனால் மனந்திரும்புவதற்கேதுவான ஞானஸ்நானம் பெற்றிருந்தனர். பவுல் அவர்களிடம், ''நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டும்'' என்றான். ''ஓ, இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானன் என்னும் பரிசுத்த மனிதனிடம் நாங்கள் ஞானஸ்நானம் பெற்றோம்.'' ''எதுவாயிருப்பினும், இதுதான் சுவிசேஷம். தேவ ஆவியானவர் இவ்வாறு எனக்கு வெளிப்படுத்தி தந்திருக்கிறார். நான் தேவனுடைய அப்போஸ்தலன். வானத்திலிருந்து வருகிற தூதனும் கூட வேறெதையாகிலும் பிரசங்கித்தால்...'' அதை நான் வேதாகமத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். பவுல், ''வானத்திலிருந்து வருகிற தூதனும் வேறெதாகிலும் கூறினால்'' என்றான். அது பேராயர், தலைமை பேராயர், போப் பாண்டவர், கண்காணிப்பாளர் யாராயிருந்தாலும் சரி, ''நான் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கடவன்“ ”...எங்களுக்கு அப்படிப்பட்ட பழக்கம் கிடையாது'', ஜனங்களால் ஏன் அதை புரிந்து கொள்ள முடியவில்லை? (சபையிலுள்ள ஒருவர் 'முன்குறித்தல்' என்கிறார் - ஆசி). பாருங்கள்? யாரோ ஒருவர் அதை ஆணித்தரமாகக் கூறினார். “முன் குறித்தல்” முற்றிலும் சரி. ஏன்? ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் (என்ன?) என்னிடத்தில் வரும்'' (யோவான். 6:37). எவ்வளவு சரியானது பார்த்தீர்களா? 'பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'. அப்படியிருக்க, நான் எதைக் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்? 113இந்த வசனத்தை நான் படிக்கட்டும். பவுல் என்ன சொன்னான் என்பதை... இன்றிரவு நான் செய்த பிரசங்கமும் முன் குறித்தல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கும் தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், சபையை அதன் ஸ்தானத்தில் பொருத்துதல் போன்றவைகளைப் பவுல் உரைத்தவைகளும் ஒன்றே. பவுல் இதை தான் கூறுகிறான். உங்களை (பவுல் காலத்தியரிடம் இதை கூறுகிறான்.) கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு? சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறு விதமாய் கூறினால், வேறு யாரோ ஒருவர் உள்ளே நுழைந்து, உங்களை வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்பி சென்றதைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 114கவனியுங்கள். பவுல் தான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிராத ஒவ்வொருவரையும் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி வருந்திக் கேட்டுக் கொண்டான். அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த இரகசியம் உலகத்தோற்றத்துக்கு முன்பிருந்து மறைக்கப்பட்டிருந்து, அவனுக்கு அப்பொழுது வெளிப்பட்டது என்றும், நாம் சுவிகாரப் புத்திரராகும்படிக்கு முன் குறிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் பவுல் கூறினான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது இப்பொழுது கற்பிக்கப்பட்டது. அவன் என்ன சொல்லுகிறான் என்று கவனியுங்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். ''மிஸ்டர், உன்னுடன் இணங்கமாட்டேன்'' என்று மாத்திரம் சொல்லிவிட வேண்டாம். ''அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்.'' அடுத்த வசனத்தை நான் படிக்கிறேன். முன் சொன்னது போல் மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். 115அது உண்மை. சகோதரனே, சகோதரியே, அன்றொரு நாள் சம்பவித்தது தேவனாயிருக்குமானால் நான் அவபக்தியாயில்லை என்று நம்பி இதை கூறுகிறேன். அந்த சிறு கூட்டத்தைக் காண்பதற்காக அவர் என்னைக் கொண்டு சென்றார்... நான் உணர்ச்சிவசப்படுகிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என்று சொல்ல முடியாது. பிரசங்கம் செய்யும் போது நான் ஆசிர்வாதத்தைப் பெறுகிறேன். அதன் காரணமாக என்னையே நான் மறந்து, நீங்கள் களைப்புற்று உங்களுக்கு உறக்கம் வரும் வரைக்கும் உங்களை நான் பிடித்து வைத்துக் கொள்கிறேன். ஆனால் ஓ... நீங்களும் அங்கு வர வேண்டுமென்று நான் எவ்வளவாக விரும்புகிறேன் என்பதை மாத்திரம் நீங்கள் அறியமுடியுமானால்! பாருங்கள்? மறுபடியும் இதை கூறுகின்றேன். அவர் இதை கூறினபோது... அவர், “முடிவு என்னவென்பதைக் காண விரும்புகிறாயா?'' என்று கேட்டார். 116நான் திரும்பி பார்த்தபோது, என் உடல் கட்டிலில் படுத்துக் கிடந்தது. நான் கூறுவது உண்மையென்று அறிந்து கொள்ள, நீங்கள் என்னை நீண்ட காலம் அறிந்திருக்கிறீர்கள். சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்யும் முன்பு சாமுவேல் கேட்ட விதமாக நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். ''கர்த்தருடைய நாமத்தினால் நான் உரைத்த யாதொன்றும் நிறைவேறாமல் போனதா? அது சரியா? அவை எப்பொழுதுமே நிறைவேறி வந்திருக்கின்றன. உங்களிடம் எப்பொழுதாகிலும் நான் பணத்திற்காக பிச்சையெடுத்ததுண்டா? இல்லை என்னால் இயன்றவரை நான் உங்களை கிறிஸ்துவினிடம் வழி நடத்த முயன்றேன் அல்லவா? ஆம், உண்மையாக. நான் மனோதத்துவத்தினால் சித்தனைகளைப் பகுத்தறிவதாக அவர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்டவை எழும்பும் என்று வேதம் கூறுகின்றது. யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றனர். பலப்பரீட்சை நிகழும் வரைக்கும், மோசே செய்ததையே அவர்களும் செய்தனர். அது உண்மை. ஆனால் யந்நேயும், யம்பிரேயும் யாரையும் சுகமாக்க முடியவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களால் வாதைகளை கொண்டு வர முடிந்தது. ஆனால் அவைகளை எடுத்துப் போட அவர்களால் முடியவில்லை. பாருங்கள்? சரி. தேவன் மாத்திரமே சுகமளிப்பவர். தேவனுடைய வார்த்தை மாத்திரமே சத்தியமாக நிலைத்து நிற்கும். 117உங்களிடம் நான் உத்தமமாக இருக்க முயன்று வந்துள்ளேன். உங்களிடம் நான் சத்தியத்தை எடுத்துக் கூற முயன்று வந்துள்ளேன். ஏறக்குறைய முப்பத்தொன்று வருட காலமாக நான் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு சத்தியத்தை உரைத்திருக்கிறேன். என்றாவது ஒரு நாளில் நான் பிரசங்க பீடத்தைவிட்டு மகிமைக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். என் மனைவி, எனது ஒரு மகன், தந்தை, சகோதரன், விலையேறப்பெற்ற நண்பர்கள்; இவர்கள் அனைவரும் மரித்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய சவப் பெட்டிகள் கல்லறைகளில் இறக்கப்படுவதையும், பூக்கள் வைக்கப்படுவதையும் நான் கண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாளில் என்னுடைய சவப் பெட்டியும் இறக்கப்படும் என்று எனக்குத் தெரியும். அது உண்மை. என் இதயப்பூர்வமாக இதை கூறுகிறேன். உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகதைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். நீங்கள் அப்படி செய்யும் போது, அது உங்களுக்கு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை, விசுவாசம் இவைகளை அளிக்கின்றது. 118அன்று காலை எனக்கு என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது. நான் சரீரத்திலிருந்து கொண்டு தரிசனம் கண்டனோ, அல்லது அந்த இடத்திற்கு நான் எடுத்துக் கொள்ளப்பட்டேனோ என்று எனக்குத் தெரியாது. என்னால் சொல்ல முடியாது. ஒன்று மாத்திரம் எனக்குத் தெரியும். எனக்கு எப்பொழுதும் மரணம் என்றால் பயம். இயேசு என்னைக் கொண்டு செல்லமாட்டார் என்பதனால் நான் பயப்படவில்லை. உங்களை நான் சந்திக்கும் போது ஒரு மூடுபனியைப் போல் ஆகாயத்தில் பறக்க நேரிடும் என்று நான் நினைத்ததால் தான். ஆனால் இப்பொழுது நான் கண்டுகொண்டேன். அந்த ஜனங்களை நான் கண்டபோது, அவர்கள் உருவமுள்ள ஜனங்களாக தத்ரூபமாகக் காணப்பட்டனர். 119பெந்தேகோஸ்தேயின் உண்மையான பிரதிநிதியாக, உண்மையான அப்போஸ்தலனாக, யாராகிலும் இருப்பார்களானால், அது எஃ. எஃ. பாஸ்வர்த் அவர்கள் தான் - சுத்தமான, நேரடியான, உண்மையான சுவிசேஷம் பாருங்கள், அதுதான் பாஸ்வர்த், அவரை என் கரங்களில் தழுவிக் கொண்டு, ''என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலருக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே“ என்று நான் புலம்பினபோது. அவர் ''மகனே, சுவிசேஷ ஊழியத்தில் நிலைத்து நில் என்றார்“. ''அந்த வாலிபர் மூடத்தனமான காரியங்களை அந்நிய நாடுகளின் ஊழியத்தில் கொண்டு செல்வதற்கு முன்பு, நீ அங்கு சென்று உன்னிடமுள்ள உண்மையான சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்'' என்றார். அவர், ''உன் ஊழியம் அடைய வேண்டிய நிலைக்கு அது இன்னும் தொடங்கவில்லை. நீ இன்னும் புதிதான பிரன்ஹாமாகவே இருக்கிறாய், மகனே, நீ இன்னும் வாலிபனாக இருக்கிறாய்'' என்றார். நான், “சகோ. பாஸ்வர்த் , எனக்கு நாற்பத்தெட்டு வயதாகி விட்டது'' என்றேன். அவரோ, ''நீ இன்னும் தொடங்கவில்லை. நீ செல்வதற்கு முன்பு, அந்த வாலிபப் பெந்தேகோஸ்தே போதகர்கள் அர்த்தமற்ற காரியங்களை அயல் நாடுகளுக்குக் கொண்டு சென்று, அங்கு விஷத்தைப் புகுத்தி, அரசு பிரதிநிதிகளும், நாடும் அதற்கு விரோதமாய் எழும்ப நீ அனுமதிக்க வேண்டாம். சகோ. பிரன்ஹாமே, நீ முன் செல்வாயாக. உன்னிடமுள்ள சுவிசேஷத்துடன் நீ செல். நீ ஒரு 'அப்போஸ்தலன்', அல்ல நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று முற்றிலும் நம்புகிறேன்'' என்றார். 120அவரை நான் பார்த்தேன். என் கரங்களினால் அவரை இறுகத் தழுவிக் கொண்டேன். நான், “சகோ, பாஸ்வர்த், உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் பிரசங்கித்து வந்த இத்தனை ஆண்டுகளில், நீங்கள் மிக்க மகிழ்ச்சியுற்ற தருணம் எது?'' என்று கேட்டேன். ''அவர், ''இந்த நேரம் தான்“ என்று பதிலளித்தார். ''நீர் மரித்துக் கொண்டிருக்கிறீர் என்று உமக்குத் தெரியுமா?“. அவரோ, “நான் மரிக்க முடியாது'' என்றார். “இதுவே மிக்க மகிழ்ச்சியுள்ள நேரம் என்று நீர் கூறக் காரணம் என்ன?” அங்கு ஒரு சிறு கதவு இருந்தது. அவர், ''என் முகம் கதவை நோக்கினால் போல் நான் படுத்துக் கொண்டிருக்கிறேன். நான் யாரை நேசித்தேனோ, நான் யாரைக் குறித்து பிரசங்கம் பண்ணினேனோ, யாருக்காக என் வாழ்நாள் முழுவதும் நான் உறுதியாக நின்றேனோ, அவர் எந்த நிமிடத்திலும் எனக்காக அந்த கதவண்டை வரக் கூடும். அப்பொழுது நான் அவருடன் சென்றுவிடுவேன்'' என்றார், நான் அவரை உற்று நோக்கினேன். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்குத் தோன்றினது. அவருடைய கரத்தை நான் பிடித்துக் கொண்டு ''சகோ. பாஸ்வர்த் , நாமிருவரும் ஒரே தேவனை விசுவாசிக்கிறோம். நாம் ஒரே காரியங்களை விசுவாசிக்கிறோம். தேவனுடைய கிருபையினால் என் கடைசி மூச்சு என் சரீரத்தை விட்டு போகும் வரைக்கும், எனக்குத் தெரிந்த வரை நான் தேவனுக்கு உண்மையாக வாழ்வேன். நான் எந்த பக்கத்திலும் எந்த விதத்திலும் சுவிசேஷத்துக்கு மாறான காரியங்களுடன் தொடர்பு கொள்ளமாட்டேன். என்னால் இயன்றவரை அதற்கு உண்மையாக வாழ்வேன். சகோ. பாஸ்வர்த், உங்களை நான் உன்னத தேசத்தில் சந்திப்பேன். அங்கு நீங்கள் ஒரு நாளும் வயோதிபராவதில்லை. நீங்கள் எப்பொழுதும் வாலிபரா யிருப்பீர்கள் என்றேன்“. அவர், ''கவலைப்பட வேண்டாம். சகோ. பிரன்ஹாம், நீங்கள் அங்கு இருப்பீர்கள்“ என்றார். 121அவர் மரிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு... அதாவது மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்த இரண்டு மாதங்கள் கழித்து; அவர் அப்பொழுது மரித்துப் போவார் என்று நான் எண்ணினேன். என் மனைவியும் கூட அவரைக் கண்டாள். (அவள் மேல் அவருக்கு அதிக பிரியம்), சகோதரி பாஸ்வர்த்தையும் கண்டாள். அவர் மரிப்பதற்கு இரண்டு மணி நேரத்திக்கு முன்பு... அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறக்கத்தினின்று எழுந்து, படுக்கையை விட்டு குதித்தெழுந்து அம்மா, உங்களை அநேக ஆண்டுகளாக பார்க்கவில்லையே தந்தையே! சகோ. ஜிம். இதோ இவர், இல்லியினாயிலுள்ள ஜோலியட் என்னுமிடத்தில் நான் கர்த்தரிடத்தில் வழி நடத்தினவர்களில் இவரும் ஒருவர்'' என்றார். அவர் மரித்து ஐம்பது வருடங்களாகிவிட்டன. “இதோ, சகோதரி இன்னார், இன்னார் ஆமாம். உங்களை வின்னிபெக் கூட்டத்தில் நான் கர்த்தரிடத்தில் வழிநடத்தினேன். இதோ சகோதரி இன்னார், இன்னார். உங்களை அநேக நாட்களாக காணவில்லையே!இன்னின்ன கூட்டத்தில் நீங்கள் கர்த்தரிடத்தில் வந்தீர்கள் அல்லவா?'' இப்படியாக இரண்டு மணி நேரமாக தாம் தேவனிடத்தில் வழி நடத்தினவர்களுடன் அவர் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். பின்பு அவர் நேராக படுக்கைக்கு நடந்து சென்று, படுத்து, கைகளை குறுக்கே வைத்தார். அவ்வளவு தான் அன்றிரவு நான் காண இயேசு அனுமதித்த அந்த தேசத்திற்கு சகோ. எஃப். எஃப். பாஸ்வர்த் பிரவேசித்தார். அப்படியானால் இன்றிரவு அவர் அங்கு வாலிபனாக இருப்பார். கர்த்தர் அவருடைய ஆத்துமாவை இளைப்பாறச் செய்வாராக. நானும் அந்த தேசத்திற்குள் பிரவேசிக்க, விசுவாசமுள்ளவனாய் எப்பொழுதும் வாழ்வேனாக! கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாக இருப்பேனாக! 122என் வாழ்க்கையைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். உங்கள் முன்னிலையில் பாவம் செய்திருந்தால் அதை எனக்கு அறிவிக்க நீங்கள் கடமைப்பட்டவர்களாயிருக்கின்றீர்கள். தேவன் தமது கிருபையினால் நான் செய்ய அனுமதித்த எல்லாவற்றிலும் நேர்மையாக வாழ நான் முயன்று வந்திருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? ஆனால் நண்பர்களே, கவனியுங்கள். என் வாழ்க்கையில் ஏதாவது தவறை நீங்கள் காண நேர்ந்தால், அதை எனக்குத் தெரியபடுத்த நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறே, இங்கு நின்று கொண்டு உண்மையான சுவிசேஷத்தை உங்களுக்கு போதிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் ஆண்களும் பெண்களுமாகிய உங்கள் ஒவ்வொரு முகத்தையும் நான் அங்கு காண எதிர்பார்க்கிறேன். இவ்விடத்திற்கும் அவ்விடத்திற்குமிடையே ஒரு மூச்சு மாத்திரமே உள்ளது அது உண்மை. அது அங்குள்ளது. 123சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே, பரலோகத்தின் தேவன், நமது தந்தை - இதை அவதூறாகச் சொல்லவில்லை - நாம் மீண்டும் பூமிக்குரிய சரீரத்தைப் பெற்று இங்கு வரும் அந்த மகத்தான நாளிலே; அப்பொழுது நாம் குடிப்போம், திராட்சை பழங்களைத் தின்போம், பூமியின் பலன்களைப் புசிப்போம். ''அவர்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். வேறொருவர் குடியிருப்பது என்பதில்லை. அவர்கள் திராட்சத் தோட்டங்களை நாட்டுவார்கள். வேரொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.'' பாருங்கள்? ஒருவன் திராட்சத் தோட்டத்தை நாட்டுகிறான், அவனுடைய காலத்திற்குப் பிறகு, அவனுடைய மகன் அதை எடுத்துக் கொள்கிறான். ஆனால் இங்கு அப்படி நடக்காது. அவன் திராட்சைத் தோட்டத்தை நாட்டி அங்கேயே நிலைத்திருப்பான். பாருங்கள். அது உண்மை, அங்கு நாம் எக்காலத்தும் இருப்போம். அந்த தேசத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் நான் காண்பேனாக! 124நான் திரித்துவ போதகர்களுக்கும் இதை கூறுகிறேன் என்று அறிவேன். சகோதரரே, உங்களைப் புண்படுத்த வேண்டுமென்று இதை நான் கூறவில்லை. நானும் ஒருவகையில் திரித்துவக்காரனே. நானும் திரித்துவத்தில் நம்பிக்கை கொண்டவன் - ஆனால் தேவனின் மூன்று தன்மைகளில் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி); மூன்று தெய்வங்களில் அல்ல. பாருங்கள்? மூன்று தன்மைகள் (attributes) உண்டு என்று முற்றிலுமாக, என் இருதயப் பூர்வமாக நம்புகிறேன் - பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ஆனால் அவை மூன்று தெய்வங்களல்ல. அவை மூன்று தன்மைகள் அல்லது தேவனின் மூன்று உத்தியோகங்கள் (offices), தேவன் ஒரு காலத்தில் பிதாத்துவத்திலும், குமாரத்துவத்திலும் வாழ்ந்தார்; இப்பொழுது பரிசுத்த ஆவியில் வாழ்ந்து கொண்டு வருகிறார். ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களைக் கொண்டவராயிருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய நாமமல்ல. தேவனுக்கு ஒரு நாமம் உண்டு. அவருடைய நாமம் இயேசு. ''பரலோகத்திலுள்ள குடும்பம் இயேசு என்று பெயரிடப்பட்டுள்ளது. பூலோகத்திலுள்ள குடும்பம் இயேசு என்று பெயரிடப்பட்டுள்ளது.'' என்று வேதம் உரைக்கின்றது. அது உண்மை. எனவே தேவனுக்கு ஒரு நாமம் உண்டு - மனித நாமம். அவருக்கு யேகோவாயீரே; யேகோவாராஃபா; என்னும் நாமங்கள் இருந்தன. அவையாவும் தேவனின் பட்டப் பெயர்கள். ஆனால் அவருக்கு ஒரு நாமம் மாத்திரமே உண்டு. இயேசு! அதுதான் அவர். உண்மையாக, என் சகோதரனே, நான் கூறுவதை நீங்கள் ஆமோதிக்காவிட்டால், ஞாபகம் கொள்ளுங்கள் எப்படியாயினும் உங்களை நான் அங்கு சந்திப்பேன். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! உங்களை நான் நேசிக்கிறேன். 125சபையே, இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். ஞாயிறு காலை நான் இங்கிருந்து தொடருவேன். உங்களை இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதிக்க வைக்கமாட்டேன். கூடுமானால் பிற்பகலிலும் ஒரு ஆராதனையை நாம் நடத்தலாம். இன்று போல் அன்றும் 10 - 30 மணி வரை ஆராதனை நடத்தலாம். என்னை மன்னிப்பீர்களா? நண்பர்களே, நமக்கு அதிக சமயமில்லை. அன்பே! உங்களை அன்பே என்று அழைக்கிறேன். ஏனெனில் நீங்கள் அனைவரும் என் 'அன்பு'கள் தான். ஒரு வேதவாக்கியம் என் நினைவுக்கு வருகின்றது. ''நான் உங்களைக் கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காக தேவ வைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன்.'' (2கொரி. 11:12). அது தான். உங்களைக் கற்புள்ள கன்னிகைகளாக ஒரே புருஷனுக்கு நியமித்துவிட்டேன். 126அது உண்மையானால், அந்த நாளில் (அங்கிருந்தவர்கள் என்னிடம்), “இயேசு உம்மிடம் வருவார். அப்பொழுது நீங்கள் எங்களை அவரிடம் ஒப்புக் கொடுப்பீர்கள்” என்றனர் - கற்புள்ள கன்னிகைகளாக. ''நீங்கள் அவர்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்'' கவனியுங்கள், பவுல் அவன் சபைக்குப் பிரசங்கித்ததையே, நானும் உங்களுக்குப் பிரசங்கித்தால், அவனுடைய கூட்டம் உள்ளே செல்லுமானால், நம்முடைய கூட்டமும் உள்ளே செல்லும். ஏனெனில் நம்மிடையே அதே சத்தியம் உள்ளது, ஆமென். ''கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக'' என்று நாம் சொல்லும் போது, நமது தலைகளை வணங்குவோம்.